‘என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்...’ சிறுவர்கள் போல் ஊஞ்சலாடிய தாலிபான்கள் - வைரல் வீடியோ
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, நாங்கள் மனம் மாறிவிட்டோம். இனி அடக்குமுறையைக் கையாள மாட்டோம் என்று தலிபான்கள் கூறியுள்ளனர். ஆனால், அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை துளி கூட இல்லை. ஆப்கான் மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று விமான சக்கரங்களில் தொற்றிக்கொண்டும், கம்பி வேலியைத் தாண்டியும் அண்டை நாடுகளுக்கு தப்பியோடி வருகின்றனர்.
20 ஆண்டு கால போரை முடித்துக் கொண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி விட்டது. காபூலிலிருந்து அமெரிக்க படைகள் முற்றிலும் வெளியேறி விட்டாலும் திட்டமிட்டப்படி அனைவரையும் வெளியேற்ற முடியவில்லை என்று பெண்டகன் கூறியுள்ளது. ஆப்கான்ஸ்தானை தாலிபான் கைபற்றியதிலிருந்து, தினமும் பல விதமான அதிர்ச்சி தரும் தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், தாலிபான்கள் வெற்றி பெற்றவுடன், ஜிம்மில் உற்சாகமாக உடற்பயிற்சி செய்வதும், கார் ஓட்டுவதும், சந்தோஷகமாக இருப்பது போன்ற வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதேபோல.. சிறு பசங்க போல சந்தோசமாக தாலிபான்கள் ஊஞ்சல் ஆடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -