2ம் தடுப்பூசி போதாது… 3ம் தவணை தடுப்பூசி போட வேண்டும் - அமெரிக்க மருத்துவர் நிபுணர் குழு அறிவுறுத்தல்!
கொரோனா கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. உலகளவில் 30 லட்சம் மரணங்கள் எனும் அச்சத்திற்குரிய எண்ணிக்கையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனா பிடியில் மீள வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது உலக நாடுகள்.
வேக்சின் போட்டவர்கள் மத்தியிலும்கூட டெல்டா கொரோனா வைரஸ் பரவுவதால் தற்போதைய சூழலில் Herd immunity எனப்படும் சமூக தடுப்பாற்றலை பெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்று பிரிட்டன் நாட்டின் மூத்த ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த மருத்துவர் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா நான்காம் அலை தற்போது வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக டெல்டா வகை பரவி வருவதால் ஏற்கெனவே இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசின் மருத்துவர் நிபுணர் குழுவும் இந்த வாரம் இது தொடர்பான பரிந்துரையை வெளியிட இருக்கிறது. முதலில், மருத்துவ பணியாளர்கள், வயதானவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு, பின்னர் அனைத்து வயதினருக்கும் விரிவுபடுத்தப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
