மனதை பறிகொடுக்கும் கடல்... விசித்திரமான கற்பாறைகள்..!
இந்த பூமியில் பல மர்மங்களும், இயற்கை அதிசயங்களும் நம்மை சுற்றி உள்ளன. அது போல கடற்கரையில் எண்ணற்ற வியக்கத்தக்க அதிசயங்கள் ஒளிந்திருக்கின்றன.
கடல் என்றாலே நம் மனதை பறிகொடுத்து விடுவோம். நீல நிறத்தில் காட்சியளிக்கும் நீர், மற்றும் மணல்கள், பாறைகளைப் பார்த்து நாம் ரசித்திருக்கிறோம். ஆனால், இந்த கடற்கரையில் உள்ள பாறைகள் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கின்றன. இந்த கற்பாறைகள் நியூஷிலாந்தின் ஒடாகோ அருங்காட்சியகம் பகுதியில் உள்ள koekohe கடற்கரையில் அமைந்திருக்கிறது.
இது கண்கவர் இயற்கை அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. கடற்கரையில் அமைந்திருக்கும் கற்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமான உருண்டை வடிவத்தில் உள்ளது. மேலும் சில கற்கள் முட்டை வடிவத்தில் உள்ளது. இந்த உருண்டை வடிவான கற்பாறைகள் ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 2 மீட்டர் அளவில் 7 டன் எடை வரை இருக்கிறது. மேலும் சிறிய அளவிலான கற்கள் இங்கு அமைந்திருக்கிறது.
இந்த கடற்கரை பகுதியில் கற்பாறைகள் அதிக அளவில் இருந்தது. ஆனால் இப்போது குறைந்த அளவில் மட்டுமே இந்தக் கற்கள் உள்ளன. இதற்கு காரணம் இங்கு அமைந்துள்ள சிறிய மற்றும் பெரிய கற்கள் அழகாக இருப்பதால் அதை உலகம் முழுவதும் வரும் சுற்றுலாப்பயணிகள் பலர் எடுத்துச் சென்று விடுகின்றனர். இதனால் இந்த கற்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது.
பந்து போன்ற உருவான இந்த கற்களை உலகம் முழுவதும் அலங்கார பொருட்களாகவும் பயன்படுத்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் இந்தக் கடற்கரையில் புதிய கற்கள் உருவாகிறது.
அந்த கற்கள் உருவாகும் போது ஆமைப் போன்று தோற்றத்தில் காட்சி அளிக்கின்றன. இவை கடலில் அடியில் இருக்கும் மங்கிய செடி, தழை போன்ற பல தாதுப் பொருள்கள் கடல் அலைகளின் காரணமாக ஒரு வண்டல் மண் உருவாகிறது. இந்த வண்டல் மண்கள் ஒன்றாகச் சேர்ந்து மொராக்கி கற்பாறைகளாக உருவாகுகிறது.



