குரங்கிடம் காதல் வயப்பட்ட பெண்! அடுத்து நடந்த விபரீதம்
பெல்ஜியம் நாட்டில் வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த மனித குரங்கை ஒரு பெண் காதலித்து வந்துள்ளார்.
வனவிலங்கு ஆர்வலரான அடிய் திம்மெர்மன்ஸ் என்பவர், வனவிலங்கு பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும் 38 வயதான சீட்டா மனித குரங்கை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். வாரம் தோறும், தனது காதலரான அந்த குரங்கை தேடி பூங்காவுக்கு செல்லும் அப்பெண் குரங்குடன் நேரம் செலவிட்டு வந்தார்.
அந்த குரங்கும், அப்பெண்ணுடன் நேரம் செலவிடுவதை விரும்பியுள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் முத்தங்களை பரிமாறி கொண்டு காதலித்து வந்துள்ளனர். இதனை கண்காணித்து வந்த பூங்கா நிர்வாகம் அப்பெண் குரங்குடன் எல்லை மீறுவதை அறிந்து அப்பெண்ணுக்கு அனுமதி மறுத்தார்.
சீட்டா, தனது இனங்களுடன் பழகுவதை விட்டுவிட்டு, அப்பெண்ணை நேசித்து வருவதே இதற்கு காரணமாக கூறப்பட்டது. இது குறித்து அடிய் பேசுகையில், நான் சீட்டாவை காதலித்து வருகிறேன். சீட்டாவும் என்னை காதலிக்கிறது. நாங்கள் பரஸ்பர காதல் வயப்பட்டிருக்கிறோம். எங்களை பிரிக்க முயற்சி செய்கின்றனர்” என்று கண்ணீரோடு தெரிவித்துள்ளார். இது குறித்து பூங்கா
நிர்வாகத்தினர் கூறுகையில், அடிய் உடனான பழக்கத்துக்கு பின் சீட்டா மனிதர்களை மட்டுமே கவனிக்க தொடங்கியது. மற்ற குரங்குகளுடன் நேரம் செலவிடாமல் தனித்து இருக்கிறது. சீட்டா மற்ற மனித குரங்குகளை போன்று இருக்க வேண்டும் என்பதாலேயே அடிய்க்கு தடை விதித்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
