விமான நிலையத்தில் சிக்கிய நபர் - வயிற்றை சோதனை போட்ட போது அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்
ஜெனீவா விமான நிலையத்தில் பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, சிக்கிய ஒருவரை சோதனை செய்த போது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சற்று சந்தேகம் வந்தது.
உடனே, அவரை அழைத்து சென்று ஸ்கேன் பரிசோதனை செய்தனர். அப்போது, அவரது வயிற்றுக்குள் 100 சிறு சிறு பாக்கெட்களில் கொக்கைன் என்னும் போதைப்பொரு.ள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
Madridலிருந்து ஜெனீவா வந்த அந்த நபர், தன்னிடம் ஒருவர் அந்த போதைப்பொருள் பாக்கெட்களைக் கொடுத்ததாகவும், ஜெனீவாவிலுள்ள ஒருவரிடம் அதை ஒப்படைக்குமாறு தனக்கு கூறப்பட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.
மேலும், விசாரணை நடத்திய அதிகாரிகளிடம் அந்த நபர் கூறுகையில், இந்த வேலையை செய்து முடித்தால் எனக்கு 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் கொடுக்கப்படும் என்றார். பிடிபட்ட நபர் 42 வயதானவர், மூன்று குழந்தைகளின் தந்தை ஆவார். தற்போது அவரை கைது செய்த போலீசார் காவலில் அடைத்துள்ளனர்.
