ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த புற்றுநோய் பாதித்த கர்ப்பிணிக்கு வெற்றிகரமாக இந்தியாவில் அறுவை சிகிச்சை!
ஆப்கானிஸ்தானிலிருந்து கணைய புற்றுநோய் சிகிச்சைக்காக வந்திருந்த 6 மாத கர்ப்பிணிக்கு, டெல்லி மருத்துவமனையொன்றில் பாதுகாப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த சிசு, எவ்வித பாதிப்பும் இல்லாமல், கணையப் பகுதியிலிருந்து புற்றுநோய்க் கட்டியை மட்டும் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி இருக்கிறார்கள்.
இந்த அறுவை சிகிச்சை குறித்து, அதை மேற்கொண்ட மருத்துவர் அமித் ஜாவத் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் கணைய புற்றுநோய்க்கு சிகிச்சை கிடைக்கவில்லை என்ற காரணத்தினால், பெண் ஒருவர் இந்தியாவுக்கு கடந்த வாரம் வந்தார். அப்பெண்ணிற்கு எங்கள் மருத்துவமனையில் கணைய புற்றுநோய் இருப்பதை உறுதி செய்தோம்.
ஐந்தரை மாத கர்ப்பிணியாக இருந்த அப்பெண், குழந்தை பிறந்த பிறகு அறுவை சிகிச்சை செய்யலாம் என யோசித்தாள். அதற்குள் புற்றுநோய் உடல் முழுக்க பரவிவிடக் கூடும் என எங்கள் அவரிடம் கூறினோம். இதனால் தாய், சேய் நலன் கருதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தோம்.
இந்த அறுவை சிகிச்சை சுமார் 4 மணி நேரத்துக்கு நடைபெற்றது. வயிற்றிலுள்ள சிசு, கொஞ்சம்கூட அசைவை பெறாத வகையில் இந்த அறுவை சிகிச்சை செய்தோம். சிகிச்சைக்குப் பின்பு, தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். பிறக்கும் குழந்தை, ஆரோக்கியமாக பிறக்கும் என்று கூறினார்.
