பிரித்தானியாவில் தன்னுடைய 3 வயது குழந்தையுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த போலீஸ் அதிகாரி! நடந்தது என்ன?
பிரித்தானியாவில் வீட்டில் தன்னுடைய 3 வயது குழந்தையுடன் போலீஸ் அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய தகவலை போலீசார் வெளியிட்டிருக்கிறார்கள். இங்கிலாந்தில் கிண்டர்மின்ஸ்டர் நகரத்தில் உள்ள ஒரு வீட்டில், கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி 39 வயது மதிக்கதக்க ஒரு ஆணும் அவரது 3 வயது ஆண் குழந்தையும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்தவரின் பெயர் டேவிட் லவுடன் (David Louden) என்பதும் மூன்று வயது பிள்ளையின் பெயர் ஹாரிசன் என்பதும் தெரியவந்தது.
டேவிட் லவுடன் ஒரு துப்பறியும் போலீஸ் அதிகாரி. அதனால் இவர்களது மரணத்தில் சந்தேகம் எழுந்தது. கடந்த சில தினங்களாக West Mercia போலீசார் எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் விசாரணை நடத்தி வந்தனர்.
ஆனால், நேற்று இருவரது பிரேத பரிசோதனை முடிவுகள் கிடைத்தது. அதாவது, டேவிட் லவுடன் தனது 3 வயது ஆண் குழந்தையை கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், சம்பவத்திற்கு முன்பு, டேவிட் லவுடனும், அவரது மனைவி சமந்தா, மகன் ஹாரிசன் மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு நபருடன் விடுமுறைக்கு வெளியூர் சென்றதாகவும், ஆனால் சுற்றுலாவை பாதியில் முடித்துக்கொண்டு தந்தையும், மகனும் மட்டுமே வீடு திரும்பியதாக அக்கம்பக்கத்தினர் போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.இது குறித்து போலீசார் மேலும் விசாரணையில் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
