‘சட்டப்படி நான் தான் ஆப்கான் அதிபர்’ : துணை அதிபர் அதிரடி ட்வீட்
ஆப்கான் அதிபர் நாட்டை விட்டு தப்பி சென்று விட்டதால், சட்டப்படி நான்தான் ஆப்கான் அதிபர் என துணை அதிபர் அம்ருல்லா சாலே அதிரடியாக தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆட்சி கைமாறியவுடன் அதிகார மட்டத்திலும் அதிரடி மாற்றங்களை தலிபான்கள் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி விமானத்தில் தப்பிச் சென்று விட்டார்.
இதனால், அச்சமடைந்த ஆப்கானிஸ்தானியர்களோ போக இடமில்லாமலும், நரகத்துக்குள் நுழைவதற்கு மனம் இல்லாமல் வாழ தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், ஆப்கான் அதிபர் நாட்டை விட்டு தப்பி சென்று விட்டதால், சட்டப்படி நான்தான் ஆப்கான் அதிபர் என துணை அதிபர் அம்ருல்லா சாலே அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்டப்படி நானே அடுத்த அதிபராக தகுதி பெற்றவன். அதிபர் இறந்தாலோ, ராஜினாமா செய்தாலோ ஆப்கான் சட்டப்படி துணை அதிபர் பதவிக்கு வரவேண்டும். நான் இப்போது ஆப்கானிஸ்தானில் தான் உள்ளதால் பொறுப்பு அதிபராக நான் இருக்கிறேன். எனக்கான ஆதரவை வழங்க வேண்டும் என ஆப்கானில் உள்ள தலைவர்களிடம் பேசி வருகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
Clarity: As per d constitution of Afg, in absence, escape, resignation or death of the President the FVP becomes the caretaker President. I am currently inside my country & am the legitimate care taker President. Am reaching out to all leaders to secure their support & consensus.
— Amrullah Saleh (@AmrullahSaleh2) August 17, 2021