“வந்தே மாதரம்... வந்தே மாதரம்” ஆப்கானிஸ்தானிலிருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள் முழக்கம்!
ஆப்கானிஸ்தானிலிருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள், சொந்த நாட்டுக்கு வந்த மகிழ்ச்சியில் வந்தே பாரதம் என்று முழக்கமிட்டனர். ஆப்கானிஸ்தானில் 20 வருடமாக நடைபெற்று வந்த போர் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அதிபரை வெளியேறிய பிறகு தாலிபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ளனர். அந்நாட்டில் இருக்கவே மக்கள் பெரிதும் அஞ்சுகின்றனர்.
இதனால், மக்கள் அவசரமாக வேறு நாடுகளுக்கு செல்ல விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக காபூல் விமான நிலையத்தில் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர்.
அங்கும் துப்பாக்கிச் சூடு நடத்தி மக்களை பதற்றமடைய செய்து தாலிபான்கள் படை. காபூல் விமான நிலையத்திலிருந்து செல்ல விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு இருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்தியிருக்கிறது. நேற்று ஏர் இந்தியா விமானத்தில் 129 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா திரும்பினர். இன்று காலை மீண்டும் 120 பேர் வந்து இறங்கினர்.
ஆப்கானிஸ்தானில் வாழும் தங்கள் நாட்டினரை திரும்ப அழைத்துக்கொள்ளும் வேலைகளில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் முழு வீச்சில் இறங்கியுள்ளன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலில் சிக்கியிருந்த 120 இந்தியர்கள் விமானப்படையின் விமானம் மூலம் குஜராத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பத்திரமாக நாடு திரும்பிய மகிழ்ச்சியில் இந்தியர்கள் ‘வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜெய்’ என முழக்கமிட்ட காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இணையத்தில் வைரலாகிவருகிறது.
अफ़ग़ान में फँसे भारतीय नागरिकों और कुछ अफ़ग़ानी लोगों को लेकर भारत पहुँचा भारतीय वायु सेना का C-17 एयरक्राफ़्ट। #IndianAirForce #Afghanishtan #Kabul #IndiansInAfghanistan pic.twitter.com/3xWSgOgbur
— Gonika Arora (@AroraGonika) August 17, 2021
#WATCH | Evacuated Indians from Kabul, Afghanistan chant 'Bharat Mata Ki Jai' after landing in Jamnagar, Gujarat. pic.twitter.com/IqvESz79IO
— ANI (@ANI) August 17, 2021