52 லட்ச ரூபாய்! உப்பை விட சின்ன ஹேன்ட் பேக் - கண்ணுக்கே தெரியாதுங்க
உப்பை விட மிகச்சிறிய ஹேண்ட்பேக் ஒன்று 52 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்னதான் இதில் இருக்கிறது என பலரும் புருவத்தை உயர்த்தி வியக்கின்றனர்.
உப்பை விட சிறிய ஹேன்ட் பேக்
பெண்களுக்கு மிகவும் பிடித்தமான பொருட்களில் ஒன்று ஹேண்ட் பேக், பல வித்தியாசமான வடிவத்தில் ஹேண்ட் போக்கை நாம் பார்த்திருப்போம், ஏன் பயன்படுத்தியும் இருப்போம்.
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் வாழ்ந்த பெண்கள் ஹேண்ட்பேக்கை பயன்படுத்தி வந்துள்ளனர்.
பல வடிவங்கள், பல நிறங்களில் ஹேண்ட் பேக்குகள் வந்தாலும் பிரான்சை சேர்ந்த நிறுவனம் ஒன்று உலகின் மிகச்சிறிய அதாவது உப்பை விட சிறிய ஹேண்ட் பேக்கை வடிவமைத்துள்ளனர்.
Louis Vuitton என்ற நிறுவனம், பேஷன் உலகின் பல புதுமைகளை படைப்பது வழக்கம். பெரிய அளவில் சிவப்பு நிற காலணி, சாத்தான் காலணி என வித்தியாசமான மக்களை ஈர்க்கும் வண்ணம் உருவாக்குவது வழக்கம்.
தற்போது 2 புரோட்டான் பாலிமரைஷேசன் என்ற உறையை பயன்படுத்தி 3டி மைக்ரோஸ்கோப் கொண்ட பச்சை நிறத்தில் உருவாக்கியுள்ளது.
அதாவது ஒரு சர்க்கரையின் சிறிய துகளை கையில் எடுத்து வைத்தால் எந்தளவு இருக்குமோ அதே அளவில் தான் இருக்கிறது.
ஊசியின் ஓட்டையில் இந்த ஹேண்ட்பேக் நுழைத்தால் கூட அது சென்றுவிடும், எனவே இதனை கண்ணால் பார்ப்பது சிரமம் என்பதால் மைக்ரோஸ்கோப் வழியாக பார்த்தால் மட்டுமே தெரியும்.
இந்த ஹேண்ட்பேக்கே தற்போது 52 லட்ச ரூபாய்க்கு ஏலம்போயுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |