உலகின் மிக சிறிய விமான பயணம் எது தெரியுமா? வெறும் 90 வினாடிகள் மட்டும் தானாம்!
பொதுவாகவே அதிக நேரம் பயணம் செய்ய வேண்டி ஏற்படும் போது அதனை இலகுப்படுத்துவதற்காகத்தான் விமான பயணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
விமானப் பயணங்கள் என்றால் நீண்ட தூரத்திற்கானவை என்ற கருத்தும் பெரும்பாலானவர்கள் மத்தியில் இருக்கின்றது.
மிக நீண்ட தூரங்களில் இருக்கும் நகரங்களை அல்லது ஏனைய நாடுகளை அடைய விமானங்களை மக்கள் தெரிவு செய்கின்றனர்.
குறிப்பாக விமானத்தில் பயணம் செய்வதற்கு எடுக்கும் நேரத்தை விடவும் விமான பயணத்தின் படிமுறைகளுக்கு எடுக்கும் நேரம் மிகவும் அதிகம்.
அப்படி நீண்ட படிமுறைகளை கடந்து விமானத்தில் அமர்ந்து ஆசுவாசப்படுவதற்கு முன்னரே பயணம் முடிந்தால் எப்படியிருக்கும்? ஆனால், 2 நிமிடங்களுக்குள் ஒரு விமான பயணமே முடிந்துவிடும் அளவுக்கு ஒரு விமான சேவை உலகில் இயங்குகின்றது என்பது உங்களுக்கு தெரியுமா?
90 வினாடிகள்
உலகின் மிகக் குறுகிய வணிக விமானப் பயணம், ஸ்காட்லாந்தின் ஆர்கனீ தீவுகளின் குழுவின் இரண்டு தீவுகளான வெஸ்ட்ரே மற்றும் பாபா வெஸ்ட்ரேக்கு இடையில் நிகழ்ந்து வருகின்றது.
வெஸ்ட்ரே மற்றும் பாபா வெஸ்ட்ரேக்கு இடையிலான விமானப் பயணம் வெறும் 90 வினாடிகளை மட்டுமே எடுக்கின்றது.
வானிலை சரியில்லாத நேரங்களில் மாத்திரமே இந்த பயணம் 2-3 நிமிடங்கள் வரை நீடிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த விமானப் பயணம், பெரும்பாலான முக்கிய விமான நிலையங்களில் காணப்படுகின்ற ஓடுபாதையின் நீளத்தை விடவும் குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடக்கத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |