அமெரிக்காவில் பிறந்த “உலகின் வயதான குழந்தை” – மருத்துவத்தில் அதிசயம்
அமெரிக்காவில் மருத்துவ வரலாற்றில் முக்கியமான சாதனையாகக் கருதப்படும் ஒரு அதிசய நிகழ்வு நடைபெறியுள்ளது. உலகின் "வயதான குழந்தை" என்று அழைக்கப்படும் குழந்தை ஒன்று, தற்போது பிரசவமாகி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1994-இல் உறைந்த கரு – 2025-இல் பிறந்த குழந்தை
1994 ஆம் ஆண்டு உறைந்த நிலையில் (Frozen Embryo) பாதுகாக்கப்பட்ட ஒரு கருவிலிருந்து, 30 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்த குழந்தைக்கு தாடியஸ் டேனியல் பியர்ஸ் (Thaddeus Daniel Pierce) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது உலகிலேயே “மிகவும் வயதான கருவிலிருந்து பிறந்த குழந்தை” என்ற வகையில் புதிய சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1990களில் பெற்றோர் IVF சிகிச்சை மேற்கொண்டனர்
குழந்தையின் உயிரியல் தாய் மற்றும் தந்தை இருவரும், 1990களில் IVF சிகிச்சை (In Vitro Fertilization) மூலம் கருவை உருவாக்கியதற்குப் பின்னர், அதை உறையவைத்த நிலையில் வைத்தனர்.
பல ஆண்டுகள் கழித்து, அந்த கருவை உருவாக்கிய தம்பதிகள் தங்களது குடும்பத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளனர்.
இதன் விளைவாக, தொடர்புடைய மருத்துவ குழுவின் உதவியுடன், அந்த உறைந்த கரு கருப்பையில் பதியப்பட்டு சுயமாக வளர்ச்சி பெற்று குழந்தையாக பிறந்துள்ளது.
இந்த அதிசய சாதனை அமெரிக்க மருத்துவத்துறையின் முன்னேற்றத்தையும், கருவியல் விஞ்ஞானத்தின் வளர்ச்சியையும் வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது. சர்வதேச ஊடகங்களில் இந்த செய்தி பரவலாகப் பகிரப்பட்டு, பல்வேறு நாடுகளிலிருந்தும் வியப்பு மற்றும் பாராட்டுகள் எழுந்துள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |