தக்காளிகள் கொண்டு உருவாக்கிய உலகின் மிகப்பெரிய நத்தார் தாத்தா!
உலகின் மிகப்பெரிய மணற்சிற்பத்தை 1.5 டன் தக்காளிகளை கொண்டு உருவாக்கியுள்ளனர்.
கிறிஸ்மஸ் பண்டிகை
இன்று உலகம் முழுதும் அனைத்து கிறிஸ்தவ மக்களும் கோலாகலமாக கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் பண்டிகையை இந்த ஆண்டு மக்கள் உற்சாகமாகவும் விமர்சையாகவும் கொண்டாடி வருகின்றனர்.
மிகப்பெரிய கிறிஸ்மஸ் தாத்தா
கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒடிசாவில் உள்ள கோபால்பூர் கடற்கரை பகுதியில் தக்களி மற்றும் மணல் கொண்டு பிரபல மணல் சிற்பக் கலைஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சுதர்சன் பட்நாயக் உலகின் மிகப்பெரும் கிறிஸ்மஸ் தாத்தா சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
27 அடி உயரமும் 60 அடி அகலமும் கொண்ட இந்த மணற் சிற்பத்துக்காக 1.5 டன்கள் தக்காளி பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இந்த சாண்டா கிளாஸின் மணல் சிற்பத்தை பெருந்திரளாக மக்கள் வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.
#TomatoSanta World's biggest Tomato with Sand #SantaClause installation of 1.5 tons of Tamato at Gopalpur beach in Odisha , India. This sculpture is 27ft high, 60 ft wide. My students joined hand with me to complete the sculpture. #MerryChristmas pic.twitter.com/HEOE426Cg8
— Sudarsan Pattnaik (@sudarsansand) December 25, 2022