கண்ணீரில் மிதக்கும் ஈழம்!
இன்று (20.06.2021) உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் சுமார் ஏழு கோடியே 80 லட்சம் பேர் அகதிகளாக இருப்பதாகவும், ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர் தங்கள் நாட்டில் வசிக்கமுடியாமல் அகதிகளாக வேறொரு நாட்டில் தஞ்சமடையச் செல்கின்றனர் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை."எல்லாச் செயலும் கணக்கிடப்படுகிறது.
எல்லோருடைய உயிரும் மதிப்புமிக்கவை" என்பது ஐ.நா.வின் அகதிகள் தினத்தின் முழக்கமாகும்.
சொந்த நாட்டைவிட்டு, இருக்கும் சிறிய சேமிப்பையும் இருப்பிடத்தையும் விட்டு ஒருவர் வேறு நாட்டிற்குப் பயணிக்கிறார் என்றால் அவரின் கையறுநிலையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
உயிர் பிழைத்தால் போதும் என்பதைத் தாண்டி அந்தப் பயணத்தின் லட்சியம் வேறொன்றும் இல்லை. சொந்த நாட்டு மக்களையே இந்தக் கரோனா காலத்தில் பாதுகாக்க முடியாமல் பல நாடுகள் திணறுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.