கேப்டன் பும்ரா டெஸ்ட்டில் படைத்த புதிய உலக சாதனை - அதுவும் இந்த பவுலர் ஓவரிலா?
இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5வது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 146 ரன்களும், ஜடேஜா 104 ரன்களையும் அடித்தனர்.
பும்ரா உலக சாதனை
அதன் பின்னர் விளையாடி கேப்டன் பும்ரா ஓரே ஓவரில் புதிய உலக சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார். அதாவது, இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர் பிராட் வீசிய ஓவரில் மட்டும் 35 ரன்களை விளாசினார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்களை சேர்த்த வீரர் என்ற உலக சாதனையை பும்ரா படைத்தார். அந்த ஓவரில் மட்டும் 4, 5 வைட்கள், நோ பால் 6*, 4, 4, 4, 6, 1 என மொத்தமாக 35 ரன்களை அடித்தார்.
பிராட்டின் மோசமான சாதனை
இதனால் பிராட் மீது கடுமையான விமர்சனங்களை இங்கிலாந்து ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன் ஸ்டூவார்ட் பிராட் ஓவரில் 6 பந்துக்கு 6 சிக்ஸர் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் டி20 விளாசி இருந்தார்.
தற்போது இங்கிலாந்து அணி 60 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்த மூன்று விக்கெட்டையும் கேப்டன் பும்ரா தான் எடுத்துள்ளார்.
BOOM BOOM BUMRAH IS ON FIRE WITH THE BAT ??
— Sony Sports Network (@SonySportsNetwk) July 2, 2022
3️⃣5️⃣ runs came from that Broad over ?? The most expensive over in the history of Test cricket ?
Tune in to Sony Six (ENG), Sony Ten 3 (HIN) & Sony Ten 4 (TAM/TEL) - https://t.co/tsfQJW6cGi#ENGvINDLIVEonSonySportsNetwork #ENGvIND pic.twitter.com/Hm1M2O8wM1
Edged and Taken!
— OneCricket (@OneCricketApp) July 2, 2022
Bumrah's outing at Birmingham keeps getting better!
Gets the better of Zak Crawley and England lose their second!#ENGvIND #INDvENG #Bumrah #TestCricket #Siraj #Shami pic.twitter.com/fkPKoF7wlG
