most expensive insect: குப்பையில் வளரும் இந்த வண்டு BMW காரை விட விலை அதிகம்! ஏன்னு தெரியுமா?
அழுகிப் போன மரங்களை சாப்பிட்டு 7 ஆண்டுகள் வரை உயிர் வாழும் மான் கொம்பு வண்டு பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
உலகின் விலையுயர்ந்த பூச்சிகளில் ஒன்று 'ஸ்டாக் பீட்டில்' (Stag beetle) அப்படியென்றால், அதன் சிறப்பு என்ன? ஏன் உலக சந்தையில் இதற்கு இவ்வளவு கேள்வி இருக்கின்றது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன காரணம்?
இந்த பூச்சிகள் 2-6 கிராம் எடையுள்ளவை மற்றும் சராசரியாக 3-7 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டவை. ஆண்களின் நீளம் 35-75 மிமீ, பெண்களின் நீளம் 30-50 மிமீ ஆக காணப்படுகின்றது.
ஸ்டாக் பீட்டில் என்ற பெயர், ஆண் வண்டுகளில் காணப்படும் தனித்தனி தாடைகளில் இருந்து பெறப்பட்டது. ஆண் ஸ்டாக் வண்டுகள் இனப்பெருக்க காலத்தில் பெண்களுடன் இணைவதற்கான வாய்ப்புக்காக, அவற்றின் தனித்துவமான, கொம்பு போன்ற தாடைகளைப் பயன்படுத்துகின்றன.
லுகானிடே குடும்பத்தைச் சேர்ந்த இந்த வண்டுக்கு முன்பு இருக்கும் தாடைப் பகுதி பார்ப்பதற்கு மான் கொம்பு போன்று இருப்பதால், Stag beetle என்று அழைக்கப்படுகிறது.அதாவது மான்கொம்பு வண்டு என்பதே அதன் தழிழ் அர்த்தம்.
அரிய வகை நோய்களுக்கு மருந்து தயாரிப்பதற்காக இந்த வண்டுகள் பயன்படுகின்றன. இதனால் இந்த ஒரு வண்டு ரூ.75 லட்சம் முதல் பல கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
வெப்ப மண்டலப் பகுதிகளில் மாத்திரமே இவற்றால் வாழு முடியும். இந்த வண்டுகள், குளிர் பிரதேசங்களில் தாக்குப்பிடிக்க முடியாது. இந்த வண்டுகள் இறந்த மரங்களை மட்டுமே சாப்பிடுவதால் ஆரோக்கியமான மரங்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்துவது கிடையாது.
இயற்கையாகவே வனப்பகுதிகளில் வாழ்கின்றன, ஆனால் மரக்கட்டைகள், பாரம்பரிய பழத்தோட்டங்கள் மற்றும் பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் போன்ற நகர்ப்புறங்களிலும் காணப்படுகின்றன.இறந்த மரங்கள் இருக்கும் பகுதிகளை அண்டியே இவை வாழ்கின்றன. இந்த வண்டு கிடைத்ததால் ஒரே இரவில் பணக்காரர் தான்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |