ஒரே டிக்கெட்டில் மூன்று நாடுகளில் பயணிக்கலாம்! எப்படி?
பச்சை பசேலென புல்வெளிகள், ரம்மியமான சூழல், பனிபோர்த்திய மலை, ஜில்லென காற்று என இயற்கை சுவாரசியங்களுடன் நெடுந்தூர பயணம் என்றால் பலரது விருப்பம் ரயில் பயணமே.
பயணத்தின் போது அற்புதமான மனிதர்களின் பழக்கம், வித்தியாசமான இயற்கை சூழலை கண்டு ரசிக்கலாம்.
மூன்று நாடுகளை சுற்றலாம்
ஒரே ஒரு ரயில் டிக்கெட்டை கொண்டு மூன்று நாடுகளில் சுற்றலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம் உலகின் மிக நீண்ட தூர ரயில் பயணங்களில் இதுவும் ஒன்று, மொத்தமாக 10,214 கி.மீ தூரத்தை கடக்க 7 நாட்கள், 20 மணிநேரம், 25 நிமிடங்கள் ஆகிறது.
இப்பயணத்தின் போது மாஸ்கோ, ரஷ்யாவிலிருந்து Pyongyang, வடகொரியா வரை செல்கிறது. 142 ரயில் நிலையங்கள் அதாவது 87 நகரங்களை கடந்து செல்கிறது, மூன்று நாடுகள் அதாவது ரஷ்யா, மங்கோலியா மற்றும் வடகொரியாவிற்கு பயணிக்கலாம்.
எதனால் தொடங்கப்பட்டது?
சைபீரியாவின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் 1916ம் ஆண்டு குறித்த ரயில் பயணம் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அக்கால கட்டத்தில் சைபீரியாவின் மக்கள்தொகை மற்றும் பொருளாதாரத்தை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட தொடங்கியது.
காலப்போக்கில் 25 ஆண்டுகள் கழித்து உலகின் நீளமான ரயில் பாதையாகவும் மாற்றம் பெற்றது. முதல், இரண்டாம், மூன்றாம் வகுப்பு தங்குமிட வசதிகள் இங்கு உள்ளன.
10214 கி.மீ பயணம்
மாஸ்கோவில் பயணத்தை தொடங்கும் ரயில் வடகொரியாவின் Pyongyang நகரில் முடிவடைகிறது, 10,214 கி.மீ தூரத்தில் 16 முக்கிய ஆறுகளை கடந்து செல்கிறது, பல்வேறு மலைகள், காடுகள், பனி போர்த்திய சமவெளிகள் என இயற்கை ஆர்வலர்கள் நிச்சயம் சுவாரசியமான பயணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.