6 நிமிடம் இருளில் மூழ்கப்போகும் உலகம்...பகல் இரவாக மாறப்போகும் நாள் எது?
சுமார் 100 ஆண்டகளின் பின்னர் பகல் இரவாக மாறும் ஒரு அரிய காட்சி நடைபெறப்போகின்றது. இதை எப்போது என்பதை இந்த பதவில் பார்க்கலாம்.
அரிய வானியல் நிகழ்வு
இந்த அரிய வானியல் நிகழ்வு இதை அடுத்து 2114 வரை நிகழதாம். அதனால்தான், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி, ஒரு மிகப்பெரிய முழு சூரிய கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த கிரகணம், பகலான நேரத்தில் 6 நிமிடங்கள் வரை இருளில் மூழ்கச் செய்யும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அளவிற்கு நீண்ட நேரம் நீடிக்கும் கிரகணங்கள் மிகவும் அரிது. இது ஒருவித வானியல் அதிசயம் எனலாம்.
இந்த முழு கிரகணம் அட்லாண்டிக் பெருங்கடலில் தொடங்கி, ஜிப்ரால்டர் ஜலசந்தி, தெற்கு ஸ்பெயின், வடக்கு ஆப்பிரிக்க நாடுகள் (மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து), சூடான், சவுதி அரேபியா, ஏமன், சோமாலியா ஆகிய பகுதிகளை கடந்து பயணிக்கும்.
ஆனால், இந்தியப் பெருங்கடலின் மேல் சென்றவுடன் கிரகணம் சற்று மங்கலாகிவிடும். இக்கிரகணம், "பெரிய வட ஆப்பிரிக்க கிரகணம்" என்று அழைக்கப்படுகிறது.
ஏனெனில், இது ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் தெளிவாகக் காணப்படும். பொதுவாக, முழு சூரிய கிரகணங்கள் 3 நிமிடங்களுக்குள் முடிந்து விடும்.
ஆனால், கிரகணம் 6 நிமிடங்கள் வரை நீடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இது நடக்க காரணமான முக்கியமான மூன்று விஷயங்கள் உள்ளன.
பூமி சூரியனிடமிருந்து அதிக தூரத்தில் (அஃபெலியன் நிலையத்தில்) இருப்பது இதனால் சூரியன் சிறியதாகத் தோன்றும்.
சந்திரன் பூமிக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது இதனால் சந்திரன் பெரியதாகத் தெரிகிறது.
சந்திரனின் நிழல் நேரடியாக பூமத்திய ரேகையில் விழுவது இதனால் நிழல் மெதுவாக நகரும்.
வரலாற்றில் மிக நீண்ட முழு சூரிய கிரகணம் கி.மு. 743-ல் நடந்ததாகக் கூறப்படுகிறது. அது 7 நிமிடங்கள் 28 வினாடிகள் நீடித்தது. இந்த 2027 கிரகணம் நிகழும் போது, "பகல் இரவாக மாறும்" அந்த சில நிமிடங்கள், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே காணக்கூடிய அனுபவமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
