உலக அளவில் குறைந்து வரும் கொரோனா: உலக சுகாதார அமைப்பு அளித்த குட்நியூஸ்
கொரோனா என்ற சொல் தற்போது உலகம் முழுவதும் அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்நோயின் தாக்கம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஒரு வார கால உலகளாவிய கொரோனா தொற்று அறிக்கையினை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதில் முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் கடந்த வாரம் புதிய கொரோனா பாதிப்பு சரிவை சந்தித்துள்ளது தெரிய வந்துள்ளது.
உலக அளவில் 31 லட்சம் பேர் புதிதாக தொற்று பாதிக்கப்பட்டும், 54 ஆயிிரம் பேர் இறந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதில் பாதிப்பு மட்டுமே 9 சதவீதம் சரிவை சந்தித்துள்ள என்றும் இறப்பில் மாற்றம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
ஆப்பிரிக்காவில் தொற்று பாதிப்பு 43 சதவீதமும், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 20 சதவீதமும், வட-தென் அமெரிக்காவிலும், மேற்கு பசிபிக் பிராந்தியத்திலும் 12 சதவீதமும் சரிவை சந்தித்து இருக்கிறது.
செப்டம்பர் இறுதி வரையில் மூன்றில் ஒரு பங்கு ஆப்பிரிக்க நாடுகள், தங்கள் மக்களில் 19 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.