தங்க ரேசரில் சேவிங் செய்யும் தொழிலாளி.. குவியும் வாடிக்கையாளர்கள்; விலை எவ்வளவு தெரியுமா?
தங்க ரேசரில் சேவிங் செய்து வரும் முடி திருத்தும் தொழிலாளியின் புகைப்படம் சோஷில் மீடியாக்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் அவிநாஷ். இவர் அப்பகுதியில் முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறார்.
தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று விளம்பரப்படுத்துவதற்காக தனது கடையில் புதிய முயற்சி ஒன்றை செய்து காட்டியிருக்கிறார் அவிநாஷ். இதற்காக, அவர் தங்கத்தினாலான ரேஸர் ஒன்றை நகைக்கடையில் செய்து வாங்கியுள்ளார். இந்த ரேஸரின் மதிப்பு ரூபாய் 4 லட்சம் என்பது குறிப்பிடதக்கது.
மேலும், தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஷேவிங் செய்யும் போது இந்த 4 லட்சம் மதிப்புள்ள தங்க ரேசரில் தான் சேவிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, தங்கரேசரில் சேவிங் செய்து கொள்ள அவரது கடையை நோக்கி வாடிக்கையாளர்கள் குவிந்து வருகிறார்கள்.
இதனால் தனக்கு அதிகமாக வருமானம் வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தொழில் போட்டி அதிகமாக இருக்கும் நேரத்தில் இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகளை செய்தால் மட்டுமே வாடிக்கையாளர்களை கவர முடியும் என்றும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்...