தங்கமாகும் மூலிகை.. ஒரு முறை சென்றாலும் உயிருடன் திரும்ப முடியாத மர்ம குகை
சேலம் மாவட்டத்தில் ஊரை விட்டு ஒதுங்கி வைத்திருக்கும் ஒற்றை மலையில் ஒரு மர்ம குகை உள்ளது.
அதற்குள் பீதியை கிளப்பும் பல மர்மங்கள் மறைந்து இருப்பதாக கூறப் படுகிறது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ளது தங்காயூர் வேலம்மாள் வலசு என்ற பகுதி. இங்கிருந்து மேலும் 4 கி.மீ. சென்றால் சூரியமலை தென்படும்.
இந்த மலையில் இருக்கும் பாதாள குகை முன்பு 100 அடி தூரத்தில் கொங்கண சித்தரின் சிலை, விநாயகர் சிலை வைக்கப் பட்டுள்ளது. இந்த சிலைகளை பவுர்ணமி மற்றும் வெள்ளி, சனிக்கிழமை களில் பக்தர்கள் தவறாமல் வழிபட்டு வருகின்றனர்.

பாதாள குகைக்குள் விஷப் பூச்சிகள் அதிகம். அதனால் யாரும் நுழைய முடியாது.
இந்த குகையில் கொங்கண சித்தர் என்ற முனிவர் வாழ்ந்த தாகவும், அவர் பல சித்து விளை யாட்டுகளை செய்து வந்ததோடு, மருத்துவ மூலிகை களை பயன்படுத்தி எந்தப் பொருளையும் தங்கமாக மாற்றும் வித்தையை கற்றவர் என்றும் கூறப்படுகிறது.
குகைக்குள் உள்ள மைதானம், நாலுகால் மண்டபத்தில் தங்கப் புதையல் இருப்பதாகவும், இந்த புதையலை சித்தர் தான் இன்றைக்கும் பாதுகாத்து வருவதா கவும் மக்கள் நம்புகின்றனர்.

குகைக்கு வெளியே மலைப் பாறையில் மேடை போல செதுக்கப் பட்டு மூலிகை களை அரைப்பதற்கு உரல் போல ஒரு துளை உள்ளது. அந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கு ஏற்ப சிறிய மேடை போன்ற அமைப்பும் செதுக்கப் பட்டுள்ளது.
இவை யெல்லாம் கொங்கண சித்தர் அங்கு வாழ்ந்ததை உறுதிப் படுத்தும் சான்றுகளாக காட்சியளிக்கின்றன.

மலை குடைந்து உருவாக்கப் பட்ட மர்மமான அந்த பாதாள குகையில் 2 அறைகள் உள்ளன.
முதல் அறை சற்று பெரியதாக காணப் படுகிறது.
2வது அறை சிறியது. இந்த அறையில் தான், படுத்தபடி நுழையும் அளவுக்கு மிகச்சிறிய துவாரம் காணப் படுகிறது.