கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும் அம்பானி வீட்டு திருமணத்தில் ஆட மாட்டேன் - பிரபல நடிகை கங்கனா
எவ்வளவு பணம் கொடுத்தாலும், நான் அம்பானி வீட்டு திருமண விழாவில் ஆட மாட்டேன் என நடிகை கங்கனா தெரிவித்துள்ளார்.
அம்பானி வீட்டு திருமணம்
அண்மையில் நடைபெற்ற ஆனந்த் அம்பானியின் திருமண விழா முந்தைய கொண்டாடத்தில் பல பிரபலங்கள் கலந்துக்கொண்டிருந்தார்கள்.
ரன்பீர் கபூர், சல்மான் கான், ஜான்வி கபூர், ஆலியா பட், ரிஹானா, அமிதாப் பச்சன், மற்றும் மனிஷ் மல்ஹோத்ரா போன்ற பலரும் கலந்துக்கொண்டிருந்தார்கள்.
இந்த விழாவிற்கு குஜராத் மாநிலம் ஜாம்நகரானது விழாக் கோலத்தில் காட்சியளித்தது. இந்நிலையில் நடிகை கங்கனா அம்பானி வீட்டு திருமணத்தில் ஆட மாட்டேன் என கூறியுள்ளார்.
அம்பானி வீட்டு திருமணத்தில் ஆடுவதற்கு மறுத்த கங்கனா
ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கான முந்தைய கொண்டாடத்திற்கு கங்கனா ரணாவத்தை நடனமாட அழைத்ததாகவும், இவர் வருவதற்கு மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது "நான் எவ்வளவோ பொருளாதார சிக்கல்களில் மாட்டியுள்ளேன். ஆனாலும் பாலிவுட்டில் நானும் லதா மங்கேஷ்கர் அவர்களும் மட்டும்தான் எந்த திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனம் ஆடக்கூடாது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம்.
திருமண நிகழ்ச்சிகளிலும் விருது நிகழ்ச்சிகளிலும் நடனமாட மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்துள்ளேன். பணம் வேண்டாம் என்று சொல்வதற்கு குணம் தேவை.
பணத்தை நல்ல முறையில் உழைத்து சம்பாதித்துக்கொள்ள வேண்டும் என்பதை இளைஞர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். இதை நான் புரிந்துக்கொண்டேன்" என அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவருடைய இந்த பதிவானது ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது எனலாம். இதற்கு பல பிரபலங்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |