சிங்கள பாட்டுக்கு புடவையில் குத்தாட்டம் போடும் பெண்கள்! இதுல இப்படி ஒரு ட்வீஸ்ட்டா... மில்லியன் பேர் பார்த்த காட்சி
பெண்கள் நடனமாடும் வீடியோ மீம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சமீபத்தில் சிங்கள மொழியில் மணிக்கே மாகே ஹித்தே என்ற பாடல் வைரலாக பரவியது.
இந்நிலையில் இந்தபாடலுக்கு சில பெண்கள் டான்ஸ் ஆடுவது போல ஒரு ரீமிக்ஸ் செய்யப்பட்டு அதை வீடியோ மீம்மாக மாற்றிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் 5 பெண்கள் வித்தியாசமான நடனமாடுகிறார்கள். அதற்கு பின்னணியில் பிரபலமான மணிக்கே மாக்கே ஹித்தே பாடல் ஒலிக்கிறது.
இதற்கு மேல மீம்மாக பள்ளி/கல்லூரி ஆண்டு விழாவின் போது மாணவிகள் டான்ஸ் பயிற்சி பெறுவதை மாணவர்கள் இப்படிதான் பார்ப்பார்கள் என் வசனம் இருக்கிறது.
இந்த வீடியோவிற்கு நடுவே ஒரு கதவை திறந்து சில நாய்கள் எட்டி பார்ப்பது போல வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ மீம் வைரலாக பரவி வருகிறது.