வயதான காலத்தில் தனது கணவரை வைத்து டூவிலரில் பறந்த பெண்! சிலிர்க்க வைக்கும் காட்சி
இணையத்தில் நாம் அன்றாடம் ஏதாவது ஒரு விநோதமான சம்பவங்கள் வீடியோக்கள் மற்றும் வேடிக்கை வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. அப்படிப்பட்ட வீடியோ ஒன்று தற்போது நம்முடைய மனதை உருக்குலைய செய்கின்றது.
அந்த வகையில் பெண் ஒருவர் வயதான ஒருவரை பின்னால் அமர்த்தி ரைட் போகும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது.
புகைப்படங்களை எடுப்பதில் ஆர்வமுள்ள கலைஞர் சுஸ்மிதா டோரா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த செப்டம்பர் 3 ஆம் திகதி இந்த வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.
வீடியோ பதிவிட்ட சில வாரங்களிலேயே இதுவரை 3.7 மில்லியன் பார்வையாளர்களை இந்த வீடியோ கவர்ந்துள்ளது.

மேலும் இந்த வீடியோவைப் பார்த்த இன்ஸ்டாகிராம் பயனர்கள், இந்த வீடியோவைப் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது என்றும், ஏன் பெண்கள் தான் எப்போதும் பின்னால் இருப்பார்கள். இது மிகவும் அபிமானமானது என்றும் தெரிவித்து வருகின்றனர்.
தென்னிந்தியாவில் இதெல்லாம் சகஜம் என்றும் அதிலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கிராமத்தில் உள்ள பெண்கள் முதல் நகரத்தில் உள்ள பெண்கள் வரை டூவிலர்களை ஓட்டுவதில் திறமைசாலிகள் என்றும் நெட்டிசன்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.