மறந்தும் உங்க மனைவிக்கிட்ட இதை சொல்லாதீங்க.. முறிவு உறுதி!
பொதுவாக திருமண வாழ்க்கையில் இணையும் பொழுது அன்பு, நம்பிக்கை, மரியாதை ஆகியன உறவை உறுதிப்படுத்துவதற்கு அவசியம்.
திருமணம் முடிந்த பின்னர், கணவர்-மனைவி இருவருக்கும் இடையில் உள்ள சில விடயங்களில் கவனம் மற்றும் மரியாதை இருந்தாவே போதும் உங்களுக்குள் எப்போதும் சண்டை இருக்காது.
இருந்த போதிலும் சில பெண்கள், தன்னை அறியாமல் கணவரிடம் கூறும் விடயங்கள் அவர்களின் வாழ்க்கையை நரகமாக்கி விடுகிறது.
இது தொடர்பில் நிபுணர்கள் பேசுகையில், மனைவியாகிய பின்னர் உங்களுடைய கணவரிடம் உண்மையாக இருப்பது அவசியம் என்றாலும், குறிப்பிட்ட விடயங்களை மறைத்து விட வேண்டும்.
அந்த வகையில், கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் உள்ள தொடர்பு எப்படி இருந்தால் அந்த உறவு நிலைக்கும் என்பதை பதிவில் பார்க்கலாம்.

1. ஒப்பிட்டு பேசுவது தவறு
உங்களுடைய கணவர் எப்படி இருக்கிறார் என்பதை வைத்து சந்தோஷப்பட கற்றுக் கொள்ளுங்கள். அவரை வேறொரு ஆணுடன் ஒப்பிட்டு பேசும் பழக்கம் இருந்தால், அது நாளடைவில் பிரச்சினையை ஏற்படுத்தி விடும். முடிந்தளவு ஆண்களை ஆண்களாக மதிப்புக் கொடுக்க கற்றுக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள்.
2. கிண்டலாக பேசுவதை நிறுத்துங்கள்
எப்போதும் மூன்றாவது நபரின் பெயரை உங்கள் துணை முன் பயன்படுத்தி பேசாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனின் கிண்டலாக பேசப்படும் அவர்களை தன்னை தாழ்த்திய சிந்தனைகளை வரவழைக்கும். என்ன தவறு என்பதை சரியாக புரிந்துக் கொண்டு துணையுடன் பேசும் பொழுது, உங்களுக்கான தீர்வை கணவர் தருவார். பல வருடங்களாக சேர்ந்து வாழப்போகும் ஒருவரிடம் மரியாதையுடன் நடந்துக் கொள்வது உங்களுடைய வளர்ப்பை காட்டுகிறது.

3. மனம் ரீதியிலான புண்படுத்தல்
நாள் முழுவதும் வேலைச் செய்து விட்டு, சோர்வாக ஆண்கள் வீட்டிற்கு வரும் பொழுது அவர்களின் மனதை புண்ப்படுத்தும் வகையில் வேலைகளை செய்யாதீர்கள். கணவர்-மனைவியுடன் வாக்குவாதங்கள் ஏற்படும் பொழுது அதனை சரியான நேரத்தில் கேட்டு முடித்து விடுங்கள். உங்களுடைய கணவர் கடினமாக உழைக்கும் பொழுது அவர்களுக்கான அங்கீகாரம் கொடுப்பது மனைவியின் கடமையாகும். எப்போதும் அவர்களை மனம் ரீதியாக புண்படுத்தாமல் இருந்தால் நீங்கள் நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.
4. வீட்டிலுள்ளவர்களை புகார் கூற வேண்டாம்
ஒருவரிடம் பிரச்சினை என்றால் அதனை சிறுவர்கள் போன்று புகார் கூறாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவது சிறந்தது. நல்ல விடயங்களை கணவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது உங்கள் மீது மரியாதையை ஏற்படுத்தும். பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டு செல்லும் பொழுது, உங்கள் மீது தவறான எண்ணத்தை உண்டு பண்ணிவிடும்.

5. கணவர் மீதுள்ள தவறை மறைத்து வையுங்கள்
உங்களுடைய கணவர் மீது ஏதாவது தவறு இருந்தால் அதனை மறைத்து வைத்திருப்பது மனைவியின் கடமையாகும். அவர்களின் அவமானப்படுத்தும் பொழுது அவர் உங்கள் மீது வைத்துள்ள அன்பு குறையும். அதே சமயம், உங்களுடைய கணவரை புகழ்ந்து பேசுவதையும் நிறுத்துங்கள். ஏனெனின் அவர்களை தற்பெறுமையடைய வைக்கும். சில சமயங்களில் மற்ற ஆண்கள் இவர்களை வீழ்த்த முயற்சிப்பார்கள். முடிந்தளவு உங்களுடைய திருமண வாழ்க்கையை ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |