தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் முதுகில் நின்று படமெடுத்த பாம்பு! பதற வைக்கும் காட்சி
வீட்டின் முன்பு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் முதுகில் நல்ல பாம்பு ஒன்று ஏறி நின்று படம் எடுத்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வீட்டு வெளியே படத்திருந்த பெண்
கர்நாடக மாநிலம், கலபுர்கி மாவட்டம், அப்சல்புரா தாலுகா, மல்லாபாத் கிராமத்தில் பாகம்மா பண்டதாள என்பவர், அவருக்கு சொந்தமான வயல் நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார்.
பொதுவாக வயல் வெளியில் பாம்புகள் வசிப்பது இயல்பானது. நேற்று காலை பாகம்மா பண்டதாள, வீட்டு வாசலில் இருந்து கயிறு கட்டீலில் படுத்து கொண்டிருந்தார்.
முதுகில் படமெடுத்த பாம்பு
அப்போது நிலத்தில் இருந்து வந்த நாகபாம்பு ஒன்று, கட்டிலில் படுத்து கொண்டிருந்த பாகம்மா மீது ஏறி அவர் முதுகில் அமர்ந்த படம் எடுத்து நின்றுள்ளது.
தனது முதுகு மீது பாம்பு இருப்பதை தெரிந்து கொண்ட பாகம்மா, பயம் இருந்தாலும் அதை வெளியில் காட்டி கொள்ளாமல், கடவுளை நோக்கி வேண்டுதல் செய்துள்ளார்.
குறித்த பெண்ணின் முதுகில் சில நிமிடங்கள் படமெடுத்து நின்ற பாம்பு பின்பு அமைதியாக சென்றுவிட்டதாக கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ள நிலையில், குறித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
When this happens, what would be your reaction??
— Susanta Nanda IFS (@susantananda3) August 28, 2022
For information, the snake moved away after few minutes without out causing any harm…
(As received from a colleague) pic.twitter.com/N9OHY3AFqA