வருங்கால கணவருடன் தனிமையில் இருந்த இளம்பெண்: சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்த துயரம்
இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு முன்னரே கணவருடன் உறவில் ஈடுப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் போபால் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவர், மன்திப்பைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவருடன் நிச்சயதார்த்தம் இரு குடும்பத்தின் பெற்றோர்களின் ஆசியுடன் நடந்ததுள்ளது.
இந்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்வது உறுதியான பின்னர் இருவரும் அடிக்கடி பல இடங்களில் சந்தித்து வந்தனர். அதன் பின்னர், கடந்த நாளில் அந்த இளம்பெண் தனது வருங்கால கணவர் தங்கியிருந்த வீட்டுக்கே சென்றார். அப்போது பேசிக் கொண்டிருந்த அவர்கள் திடீரென இருவரும் தன்னிலை மறந்து உறவில் ஈடுபட தொடங்கினர்.
உறவுக்கு பின்னர் எதிர்பாராத விதமாக அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பிலிருந்து ரத்தப்போக்கு ஏற்பட்டதுள்ளது. ஆரம்பத்தில் சிறிய அளவில் இருந்த அது, பின்னர் அதிகரித்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளைஞன் அந்த பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். மருத்துவர்களிடம் நடந்த விவரத்தை அவர் கூற, பதறியப் போன மருத்துவர்கள் பெண்ணின் ரத்தப் போக்கை தடுக்க போராடினார்.
ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அந்தப் பெண்ணை டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். அங்கும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்த மருத்துவர்கள் முயற்சி செய்தனர்.
ஆனால் அது இயலவில்லை, தொடர்ந்து ரத்தப்போக்கு இருந்ததால் மயக்க நிலைக்குச் சென்ற அந்த இளம்பெண் மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்,. மகளை கண்ட பெற்றோர்கள் அந்தப் பெண்ணின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
அதன் பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர். பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
எதனால் அந்தப் பெண்ணுக்கு பிறப்புறுப்பில் இருந்து ரத்தப்போக்கு ஏற்பட்டது என்பது உடற்கூறு பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், திருமணத்திற்கு இன்னும் ஒரு மாத காலம் இருந்த நிலையில் இருவரும் உறவில் ஈடுபட்டு பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.