நாயைக் காப்பாற்ற நினைத்த பெண்! அனுபவித்த துயரத்தை நீங்களே பாருங்க
நாயைக் காப்பாற்ற நினைத்து காரை நிறுத்திய பெண்ணின் கார் சுக்குநூறாகிய காட்சி வைரலாகி வருகின்றது.
பெண் ஒருவர் சாலையில் தனது காரை ஓட்டிவந்த நிலையில், சாலையைக் கடக்க தவித்த நாய்குட்டிக்கு வழிவிடுவதற்கு சில நொடிகள் காரை நிறுத்தியுள்ளார்.
நாயும் சாலையைக் கடக்க சென்ற நேரத்தில் பின்னே வந்த இருசக்கர வாகன ஓட்டுனர், காரின் மீது கண்மூடித்தனமாக மோதியுள்ளார்.
இதனால் தூக்கிவீசப்பட்ட அந்த நபர், குறித்த காரின் முன்பக்கம் வந்து விழுந்த நிலையில், காரின் முன் கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியுள்ளது.
இதில் குறித்த பெண் அப்பாவியாக காரிலிருந்து வெளியே வந்து, அவதானித்துக் கொண்டிருக்கின்றார். நாய்க்கு நல்லது நினைத்த பெண்ணிற்கு இப்படியொரு துயரமா? என்ற கேள்வியே குறித்த காணொளியினை அவதானித்தால் எழுகின்றது.
किसका गलती हे !!!!!?#SaniaMirza #MumbaiRains #Encounter pic.twitter.com/yI8z5i2Xgg
— Raghav Chaturbedi (@RaghavChaturbe2) March 6, 2023