வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே குளிக்கும் பழங்குடி பெண்கள்- அதுவும் தண்ணீரில் இல்லை
ஹிம்பா கலாச்சாரத்தை சேர்ந்த பெண்கள் வாழ்நாட்களில் குளிப்பதை தவிர்க்கிறார்கள். அதற்கு பதிலாக அவர்கள் வேறு ஏதோ செய்து தங்களை நறுமணத்துடன் வைத்துள்ளளார்கள் அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஹிம்பா பழங்குடி பெண்கள்
ஹிம்பா பெண்கள் மிகவும் அழகான ஆப்பிரிக்க பெண்கள் என வகைப்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் பார்ப்பதற்கு ஒரு வசீகர அழகுடன் தென்படுவார்கள்.
இவர்களின் தலைமுடி மற்றும் தோலில் ஒரு விசித்திரமான சிவப்பு காவி பேஸ்ட்டை பயன்படுத்துவார்கள். இந்த பேஸ்ட் காவி, வெண்ணெய் கொழுப்பு மற்றும் நறுமணம் கொண்ட மூலிகைகள் ஆகியவற்றின் கலவையிலிருந்து தயாரிக்கப்படும்.
இதையே அவர்களின் அழகிற்கு முக்கிய காரணியாக உள்ளது. இந்த பேஸ்ட் மூலம் சிவப்பு நிறமாக மாறுவது அவர்களின் சருமத்தை வலுவான வெயிலிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் பூச்சிகளை அவர்களை நெருங்கி விடாமல் பாதுகாக்கிறது.
இவர்கள் இயற்கைக்கு மதிப்பளித்து அதில் ஆழமாக வாழ்வார்கள். இந்த பழங்குடியினர் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் வேட்டையாடுதல் ஆகியவற்றை செய்து வாழ்கிறார்கள்.
பெரும்பாலும் வறண்ட பகுதியிலேயே இவாகள் வாழ்வார்கள். இவர்களின் முக்கிய உணவு தினை அல்லது சோளத்தால் செய்யப்பட்ட கஞ்சி, அதை அவர்கள் ஒவ்வொரு வேளை உணவிலும் எடுத்துக்கொள்கிறார்கள்.
சிறப்பு சந்தர்ப்பங்களில் மட்டுமே இறைச்சி சாப்பிடுகிறார்கள். இந்த பழங்குடியை சேர்ந்த பெண்கள் தண்ணீரில் அதிக நேரம் செலவிடாமல் இயற்கையாக சுத்தத்தை பேணுகின்றனர்.
ஹிம்பா மக்கள் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களைக் கொல்லும் புகைக் குளியலைத் தேர்வு செய்கிறார்கள். குளிக்கவும் பூச்சிகளைத் தடுக்கவும் சிறப்பு மூலிகைகளை எரிப்பதன் மூலம் தயாரிக்கப்படும் புகையை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
புகை குளியல்களுடன், வேகவைத்த தாவரங்களால் செய்யப்பட்ட நீராவி குளியல்களையும் ஹிம்பா பெண்கள் சுத்திகரிப்பு சடங்காகப் பயன்படுத்துகின்றனர். இது உடலில் இருக்கும் நச்சுக்கள் நாற்றங்களை போக்க உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
