நீதிமன்றத்தில் சரமாரியாக தாக்கிக் கொண்ட பெண் வழக்கறிஞர்கள்! நடந்தது என்ன?
நீதிமன்றத்தில் வாதாடும் இரண்டு பெண் வழக்கறிஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரின் தலைமுடியை இன்னொருவர் பிடித்திழுத்து தாக்கிக் கொள்ளும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெண் வழக்கறிஞர்கள் மோதல்
குறிப்பிட்ட இருவரும் உத்தரப்பிரதேசம் காஸ்கஞ்ச் மாவட்ட நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்களாக பணியாற்றி வருகிறார்கள்.
ஏற்கனவே இவ்விருவருக்கும் சில நாட்களாகவே வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. சம்பவத்தினத்தன்று இருவரும் கன்னத்தில் அறைந்து, தலைமுடி இழுத்துக் கொண்டு கடுமையாக சண்டை பிடித்துள்ளனர். சண்டை முற்றியதால் பெண் காவலர்கள் விரைந்து இருவரையும் பிரித்துள்ளனர்.
காரணம் என்ன தெரியுமா?
இதனை தொடர்ந்து விசாரனையில் இரு வழக்கறிஞர்களும் தங்கள் தரப்புகளுக்காக ஆஜரான நிலையில், விசாரணை முடிந்து வெளியே வந்தும் வழக்கு தொடர்பாக எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் மோதிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
WWE show from Uttar Pradesh. pic.twitter.com/hPAaBmnRqm
— News Arena (@NewsArenaIndia) October 28, 2022