வேலைக்கு சென்ற மகன்: சடலமாக கிடந்த தாய்! பின்னணியில் நடந்த கொடுமை
கழுத்தில் அணிந்திருந்த நகைக்காக தான் வேலை செய்து வந்த வீட்டின் முதலாளியை கொலை செய்துள்ள வேலைக்கார பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூரில் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ஜாக்குலின் மேரி(65). இவரது கணவர் சில வாரங்களுக்கு முன்பு இருந்த நிலைியல் மகன் பிராங்கிளின் உடன் வசித்து வந்துள்ளார். பிராங்கிளின் ரயில்வே துறையில் டிடிஆர் ஆக பணிபுரிந்து வருகின்றார்.
இந்நிலையில் அவர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், ஆரோக்கிய டென்சி என்பவர் ஜாக்குலின் மேரியை கவனித்து வீட்டு வேலையினை செய்து வந்துள்ளார். கடந்த 16ம் தேதி ஜாக்குலின் மேரிக்கு மகன் போன் செய்துள்ள நிலையில், எந்தவொரு பதிலும் இல்லாமல் இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த மகன் மாடி வீட்டில் குடியிருப்பவருக்கு போன்செய்து தனது தாயிடம் போனை கொடுக்குமாறு கூறியுள்ளார். அப்பொழுது தாய் சடலமாக கிடப்பதாக அவர் கூறியதையடுத்து, உடனே வீட்டிற்கு வந்துள்ளார்.
தனது தாய்க்கு, வலிப்பு நோய் இருப்பதால், அதனால் உயிரிழந்திருக்கலாம் என்று நினைத்த மகன் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் அப்பொழுது தாயின் கை மற்றும் கழுத்தில் அணிந்திருந்த நகை காணாமல் இருந்ததால், பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்பு தாயின் உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்பு உண்மை தெரியவந்துள்ளது. ஜாக்கிலின் மேரி கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவருடன் இருந்த வேலைக்கார பெண்ணான ஆரோக்கிய டென்சியிடம் விசாரணை மேற்கொண்ட போது, ஐந்தரை பவுன் நகைக்காக கொலை செய்ததும், அவரது தொலை பேசியை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார். தற்போது வேலைக்கார பெண்ணை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
