அண்ணா விட்டுருங்க னா என இரவில் கெஞ்சிய இளம்பெண்! சினிமா பாணியில் கடத்தப்பட்ட பகீர் காட்சி
காதலிக்க மறுத்த இளம்பெண் ஒருவரை 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீடுபுகுந்து கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலிக்க மறுத்த இளம்பெண்
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டுத் தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகன் விக்னேஸ்வரன் (34). இவர், மயிலாடுதுறையில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தபோது பட்டதாரி பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் விக்னேஸ்வரனின் நடவடிக்கை சரியில்லாததால் அவருடன் பழகுவதை இளம்பெண் நிறுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விக்னேஷ் அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ள நிலையில், இரண்டுமுறை மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளனர்.
பொலிசார் இனி அந்த பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறி விக்னேஷிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த மாதம் 12ம் தேதி அப்பெண்ணை கடத்த முயன்ற நிலையில் அப்பெண் தப்பித்து காவல்நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். இதனால் பொலிசார் விக்னேஷை வலைவீசி தேடி வந்துள்ளனர்.

நள்ளிரவில் கடத்தப்பட்ட சோகம்
இந்நிலையில், நேற்று இரவு பைக் மற்றும் காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் 15-க்கும் மேற்பட்டோர், அப்பெண் வீட்டுக்குள் நுழைந்து சினிமா பாணியில் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கடத்தப்பட்ட பெண் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே மீட்கப்பட்டார்.
மேலும் இளம்பெண்ணை கடத்தி சென்ற விக்னேஷ்வரன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
