தனக்கு கொடுத்த ரெட் கார்டை பெண்களுடனே கொண்டாடிய பிரதீப்! பிக் பாஸில் இவரிடமா பாதுகாப்பு இல்லை?
பிக் பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பிரவீன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ் பிரதீப்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகிய 5 பேரும், நேற்றைய தினம் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப்பும் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் இன்று யார் வெளியேற உள்ளார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த மாதம் 29ம் தேதி ஞாயிற்று கிழமை மீண்டும் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் உள்ளே வந்துள்ளனர்.
இந்நிலையில், பிரதீப் வெளியேறிய பின்பு பதிவிடப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. ஆம் முதலில் தான் உள்ளே விளையாடி பிக் பாஸிலிருந்து கொண்டு வந்த பொருட்களை புகைப்படமாக வெளியிட்டிருந்தார்.
தற்போது தான் ரெட் கார்டு வாங்கியதை கொண்டாடும் விதமாக தனது நண்பர்கள், உறவினர்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் ஒரு புகைப்படத்தில் பிரதீப்பை சுற்றிலும் பெண்கள் காணப்படுகின்றனர்.
இதனை அவதானித்த ரசிகர்கள், இவரிடமா பாதுகாப்பு இல்லை என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். வேறு சிலர் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கொடுக்கப்பட்ட ரெட் கார்டை பெண்களை வைத்தே கொண்டாடிய பிரதீப் என்று கூறி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |