குழந்தைகளுடன் வெளியே சென்ற 26 வயது பெண்... தேடி சென்ற தாயாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கணவரை இழந்த இளம்பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (31). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த செல்வி(26) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளத.
இந்த தம்பதிகளுக்கு அனுஷ்கா (5), மாதேஷ் (2) இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சங்கரநாராயணன் தீப்பெட்டி ஆலையில் செய்து வந்துள்ளார்.
குடும்பத்தில் அடிக்கடி தகராறு வந்த நிலையில், கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவர் இறந்ததும் தாய் வீரலட்சுமி(60) வீட்டின் அருகே இரண்டு குழந்தைகளுடன் வசித்த நிலையில், தீப்பெட்டி ஆலையில் சேலை செய்தும் செல்வி வந்துள்ளார்.
கணவரின் மறைவிற்கு பின்பு சோகமாகவே இருந்த செல்வி, நேற்று காலை தனது நகைகளை எல்லாம் கழற்றி வைத்துள்ளார். இதனை அவதானித்த தாய், எதற்காக நகையை கழற்றுகிறார் என்று கேட்டதற்கு சும்மா தான் கழட்டி வைக்கின்றேன் என்று கூறியுள்ளார்.
பின்பு குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஊருக்கு வெளியே உள்ள கிணற்றில் குழந்தைகளை வீசிவிட்டு, தானும் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வெகுநேரமாகியும் மகள், பேரன்களையும் காணாததால் தாய் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது, ஊருக்கு வெளியே நடந்து சென்றதாக கூறியுள்ளனர்.
பின்னர் வீரலட்சுமி மற்றும் உறவினர்கள் அங்கு சென்று தேடிப்பார்த்த போது, கிணற்றில் செல்வியும், குழந்தை அனுஷ்காவும் பிணமாக மிதந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
