2 வருடங்களாக டேட்டிங்கில் இருந்த இளம்பெண்கள் - பின்பு தெரிய வந்த உண்மை!
இரண்டு இளம்பெண்கள் 2 ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்த சம்பவம் பின் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உலகம் முழுவதுமே தற்போது காதல் பற்றிய புரிதல்கள் நிறையவே மாறிவிட்டன. ஒருபால் காதல் திருமணத்தை நடத்த பல நாடுகள் அங்கீகரித்துவிட்டன. ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண் என கலாச்சாரம் சீரழிந்து மாறி வருகிறது.
அந்த வகையில், கனடா நாட்டை சேர்ந்த கார்லி கோன்சியர் மற்றும் மெர்சிடிஸ் ஸ்டீவர்ட் (Carley and Mercedes) என்ற இரு பெண்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக டேட்டிங்கில் இருந்து வந்துள்ளனர்.
ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய இவர்கள். காலப்போக்கில் காதலர்களாக மாறிவிட்டனர். இருவரும் இணைந்து டிக்டாக் வீடியோக்களை பதிவிடுவதும் வழக்கம். அதன் படி சமீபத்தில் இவர்கள் பதிவிட்ட வீடியோவில், இவருடைய அம்மாவும் ஒரே ஆணை காதலித்து வந்ததாக கூறியிருக்கிறார்கள்.
இதனால் கமெண்டில் ஏராளமான மக்கள் பல கேள்விகளை முன்வைத்தனர். பலரும் இருவரும் பார்க்க ஒரே மாதிர் உள்ளீர்கள் மரபணு சோதனை எடுத்து பாருங்கள் என கூறியுள்ளனர்.
அதற்கு அவர்கள் எங்களுக்கு அச்சமாக இருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவும் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.
இந்த வீடியோ வைரலாகி நிலையில், நாங்கள் உண்மையில் உறவினராக இருந்தால் ஒன்றாக இருப்பது தவறா? என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.