பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள்? அறிவியல் காரணம் இதோ
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் என்பதற்கான காரணத்தையும், அறிவியல் விளக்கத்தையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அழுகை
அழுகை என்றாலே பெரும்பாலான நபர்கள் பெண்களைத் தான் நினைவு கூறுவார்கள்.
ஏனெனில் பெண்கள் என்றாலே எப்பொழுதும் அழுதுகொண்டே இருப்பவர்கள் என்ற எண்ணம் அதிகமாகவே இருக்கின்றது.
ஆனால் அழுகை என்பது இயல்பான ஒன்றாகும். ஆண்கள் அழுதால் வித்தியாசமான இந்த சமூகத்தினர் வித்தியாசமாக அவதானிப்பார்கள்.
உணர்ச்சிகளை அதிகமாக கட்டுப்படுத்துவதில் பெண்களை விட ஆண்கள் தான் காணப்படுகின்றனர்.
ஆனால் பெண்கள் அழுவதற்கு பின்பு இருக்கும் அறிவியல் காரணம் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.
ஏன் பெண்கள் அழுகின்றனர்?
2011 ஆய்வில், பெண்கள் வருடத்திற்கு 30-64 முறை அல்லது அதற்கும் மேல் அழுகிறார்கள் என்றும் ஆண்கள் 5-7 முறை மட்டுமே அழுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
ஆண்களுக்கு இருக்கும் டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் ஆண்களை வலிமையாகவும், அவர்களை அழாமலும் வைக்கின்றது.
புரோலாக்டின் ஹார்மோன் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவுகிறது. பெண்களுக்கு இது மிகவும் அதிகமாக இருப்பதால், பெண்கள் அதிகம் அழுவதற்கு காரணமாக இருக்கின்றது. ஆனால் ஆண்களுக்கு இந்த ஹார்மோன் மிகவும் குறைவாகவே இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |