வீட்டில் பெண்கள் பணம் சம்பாதிக்க அரிய வாய்ப்பு - இந்த Business செய்தால் போதும்
வீட்டில் இருக்கும் பெண்கள் ஏதாவது வேலை செய்து வருமானம் ஈட்ட வேண்டும் என்று நினைத்தால் அல்லது ஆசைப்பட்டால் அவர்கள் கிளவுட் கிச்சன் தொடங்குவது சிறந்த ஒரு வழியாகும்.
கிளவுட் கிச்சன்
வீட்டில் இருககும் எல்லா பெண்களும் தற்கள் குடும்பத்தை கவனித்து வீட்டில் வேலை செய்து கொண்டு இருப்பார்கள்.ஆனால் அவர்களுக்கும் சின்னதாக எதாவது வருமானம் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பார்கள்.
ஆனால் ஆண்களை விட பெண்கள் தற்போது பிசினசில் அர்வம் காட்டி வருகிறார்கள். ஒருபக்கம் குடும்பம், இன்னொரு பக்கம் வேலை அல்லது பிசினஸ் இவை இரண்டையும் சரியாக சமாளிக்க பெண்களுக்கு மட்டுமே திறமை உள்ளது.

முன்பெல்லாம், நம் அம்மாக்கள் வீட்டில் இருந்தப்படியே புடவை பிசினஸ், நைட்டி பிசினஸ், பலகாரம் பிசினஸ், பூ கட்டி கொடுப்பது, துணி தைப்பது என சின்ன சின்ன பிசினஸ்களை செய்து, அதில் வரும் ஒரு வருமானத்தை சேமிப்பில் போடுவார்கள், சில பெண்கள் கணவன்மார்களுக்கு தெரியாமல் இதை செய்து, ஒரு பெரிய தொகையை கூட சேமிப்பாக அவசர காலத்தில் கொடுத்து உதவுவார்கள்.
இப்படி இருக்க சமீப காலமாக அதாவது இரண்டு ஆண்டு காலமாக கிளவுட் கிச்சன் பிசினசில் பெண்கள் இறங்கி உள்ளனர்.
கிளவுட் கிச்சன்
தன் சொந்த ஊரில் இருந்து வெளியூர்களுக்கு வேலை காரணமாக வந்து தங்கி இருப்பார்கள். இந்த நேரத்தில் மிகவும் பிஸியாக இருப்பார்கள்.
படிப்பவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் தொடக்கம் வீட்டு உணவை அதிகம் விரும்புவார்கள்.
அவர்களுக்கு அதிக மசாலாக்கள் சேர்க்காமல் வீட்டில் செய்வது போன்ற ருசியும், ஹோட்டலில் சாப்பிடுவதைவிட குறைவான விலையிலும் நீங்கள் உணவை சமைத்து, அதை ஸ்விகி, சோமேட்டோ போன்ற உணவு டெலிவரி ஆப் மூலம் விநோயகம் செய்வதே இந்த கிளவுட் கிச்சன்.

இதை செய்ய நீங்கள் உணவு டெலிவரி ஆப்புடன் ஒரு தொடர்பை மேற்கொள்ள வேண்டும்.
அவர்கள் வீட்டுக்கு வந்து நீங்கள் சமைத்த உணவுகளை பெற்று கொண்டு, ஆர்டர் செய்தவர்களுக்கு டெலிவரி செய்து விடுவார்கள்.
மொத்த ஆர்டரில் அவர்களுக்கு ஒரு தொகை நீங்கள் கமிஷனாக தர வேண்டும். மிஞ்சிய பணம் உங்களுக்கு தான். இது தான் கிளவுட் கிச்சன் பிசினஸ்.
கிளவுட் கிச்சன் தொடங்க தேவையானவை
50 முதல் 300 சதுர அடி வரை இடம் போதுமானது. வீட்டு மாடியில் அல்லது வீட்டு கிச்சனிலேயே தொடங்கலாம். சுத்தமாகவும், சுகாதார விதிகளுக்கு ஏற்பவும் இருக்க வேண்டும்.
உங்கள் சமையலறைக்கு ஒரு அழகான பெயர் வைத்துக் கொள்ளவும். அதற்கேற்ற லோகோவும் பிராண்ட் ஐடென்டிட்டியும் உருவாக்கவும். இது சமூக வலைதளங்களில் புரமோஷனுக்கு உதவும்.

காலை, மதியம், இரவு உணவுகள் என பட்டியலிடவும். தனிச்சிறப்பான டிஷ் (Signature dish) ஒன்றை வைத்துக்கொள்ளவும். வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் மாற்றங்கள் செய்யலாம்.
Swiggy, Zomato போன்ற ஆப்களில் tie-up செய்து உங்கள் கிச்சனை பதிவு செய்யவும். உங்கள் மெனு, விலை, நேரம் முதலிய விவரங்களை சரியாக பதிவிடவும்.
இது மிக முக்கியம். உணவு கலந்துவிடாதபடி தரமான பேக்கிங் மடீரியல் பயன்படுத்தவும். வாடிக்கையாளர் அனுபவம் இதில்தான் தீர்மானிக்கப்படும்.
முதலீடு குறைவு, லாபம் அதிகம் என்றால் சரியான திட்டமிடல் முக்கியம். வாடிக்கையாளர்களின் கருத்துக்களை கேட்டு தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ளவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |