மல்லிகை செடி நறுமணத்துடன் பூத்து குலுங்கணுமா? இந்த மலிவான உரம் 1 கைபிடி போதும்
மல்லிகை செடியில் அதிகமான பூக்களும் அதன் வாசம் ஊர் முழுக்க வீச வேண்டும் என்றால் அதற்கு மிகவும் மலிவான விலையில் ஒரு உரத்தை பற்றி பதிவில் பார்க்கலாம்.
மல்லிகை பூ செடிக்கு உரம்
எல்லோரது வீட்டிலும் மல்லிகை செடி கட்டாயமாக இருக்கும். ஆனால் சிலருக்கு மல்லிகை செடி ஆசைக்கு வைத்திருந்தாலும் அதில் பூக்கள் வந்திருக்காது.
இலைகளுடன் செடி மரம் மட்டும் இருக்கும். ஆனால் நீங்கள் கவனித்துள்ளீர்களா? எப்போதும் செடிகள் பூத்துக் குலுங்குவதன் ரகசியம் தெரியுமா?
அதற்கு ஒரு ரகசிய உரம் போடப்படுகின்றது. இதை சொன்னவுடன் நீங்கள் நினைக்க வேண்டாம் அது இரசாயனம் உன்று இது இயற்கையான கனிமம் ஒன்றாகும்.
இந்த உரம் வெறும் ஒரு தேக்கரண்டி போதும், நீங்கள் வீட்டில் வளர்க்கும் செடியில் மார்ச் முதல் அக்டோபர் வரை பூக்கள் நிரம்பி வழியத் தொடங்கும்.

கவாத்து - முதலில் நாம் ஒரு செடியை வைத்தால் அதற்கு கவாத்து செய்வது மிகவும் அவசியம். செடியின் தண்டுகளை வெட்டி அதற்கு ஒரு நல்ல வடிவத்தை கொத்து மேலும் அது வளர உதவ வேண்டும்.
இதனால் புதிய கிளைகளில்தான் அதிக மொட்டுகள் மற்றும் பூக்கள் உருவாகும். நீங்கள் கவாத்து செய்த ஒரு மாதத்திற்குப் பின்னர் புதிய கிளைகள் மற்றும் மொட்டுகள் உருவாகுவதை பார்க்கலாம்.

உரம் - செடியில் புதிய கிளைகள் வந்த பிறகு இந்த மலிவான இரசாயன உரக் கலவையைச் செடிக்குக் கொடுக்க வேண்டும். இந்தக் கலவைக்குத் தேவைப்படுவது இரண்டு பொருட்கள் தான்.
இது கால்சியம் சல்பேட் டைஹைட்ரேட் என்ற இயற்கை கனிமம். ஒரு கிலோ இந்திய விலையில் 30 முதல் 40 வரை மிகவும் மலிவாகக் கிடைக்கும்.
இது செடியின் தண்டுகளை வலுப்படுத்த உதவும். அடுத்து NPK சூப்ரா இந்த இரசாயன கலவையில் நைட்ரஜன் (தண்டு வளர்ச்சிக்கு), பாஸ்பரஸ் (வேர் மற்றும் பூ வளர்ச்சிக்கு), பொட்டாசியம் (பழம் மற்றும் பூக்கள் பருமனுக்கு) ஆகியவை நிறைந்துள்ளன.
இதுவும் இந்திய விலையில் கிலோ 30 முதல் 40 வரை மிக மலிவாகக் கிடைக்கும்.

இந்த உரத்தை செய்ய - ஜிப்சம் மற்றும் NPK சூப்ரா உரங்களை சம அளவில் எடுத்து நன்றாகக் கலந்து, காற்றுப் புகாத டப்பாவில் சேமிக்கவும். மாதம் ஒருமுறை, ஒரு தேக்கரண்டி உரம் மட்டுமே எடுத்துப் செடியின் விளிம்பைச் சுற்றிலும் தூவ வேண்டும். உரத்தை போடுவதற்கு முன்னர் மண்ணை லேசாக கிளறி விட வேண்டும்.
நறுமணமும், அதிக பூக்களும் - இந்த உரக் கலவையை நீங்கள் தவறாமல் பயன்படுத்தினால், அதில் உள்ள கால்சியம் காரணமாகத் தண்டுகள் வலுப்பெறும்.
சல்ஃபர் (Sulfur) சத்து இருப்பதால், பூக்களின் நறுமணம் 30 அடி தூரம் வரை வீசும் மற்றும் அதிக மொட்டுகள் உருவாகும். பூக்களின் ஆயுட்காலம் அதிகமாக இருக்கும்.
பின் குறிப்பு ஒரு தேக்கரண்டிக்கு மேல் உரம் வைக்க வேண்டாம். அதிகமாக வைத்தால் செடியின் இலைகள் மற்றும் தண்டுகள் கருக வாய்ப்பு அதிகம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |