எவ்வளவு பணத்தை செலவு செய்தாலும் பெண்களால் மட்டும் இந்த இடங்களுக்கு செல்ல முடியாது: ஏன்?
உலகில் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள 4 இடங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
உலகில் பெண்கள் செல்ல தடை விதிக்கபட்ட இடங்கள்
மவுண்ட் ஓமைன், ஜப்பான் : இது ஜப்பானில் மவுண்ட் ஓமைன் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு இடமாகும். இங்கு அஅதன் மத முக்கியத்துவத்திற்காக அறியப்படும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாகும்.
இங்கு பழங்கால ஷின்டோ மரபுகள் காரணமாக பெண்கள் தீவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு துய்மையை பேணுவதற்காக இந் தடை விதிக்கபட்டுள்ளது.
ஒகினோஷிமா தீவு, ஜப்பான் : இது ஜப்பான் கடலில் அமைந்துள்ளது. இங்கு மத முக்கிய தலமாக அறியப்படும் யுனெஸ்கோவில் பழங்கால ஷின்டோ மரபுகள் காரணமாக பெண்கள் தீவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. புனிதமாகக் கருதப்படும் இந்த தீவின் தூய்மையைப் பராமரிக்க இந்தத் தடை விதிக்கபட்டுள்ளது.
மவுண்ட் அதோஸ், கிரீஸ் : இது கிரேக்கத்தில் உள்ள தன்னாட்சி பகுதியாகும். இது ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவத்தின் புனிதமான தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் மவுண்ட் அதோஸில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காரணம் துறவற வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும் ஆன்மீக நோக்கங்களிலிருந்து கவனச்சிதறலைத் தவிர்ப்பதற்கும் பெண்கள் நுழைய தடை விதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பர்னிங் ட்ரீ கிளப், அமெரிக்கா: இது அமெரிக்காவின் மேரிலாந்தின் பெதஸ்தாவில் அமைந்துள்ளது. இது முழுக்க முழுக்க ஆண்களின் கோல்ஃப் கிளப் ஆகும். இந்த கிளப் 1922 இல் திறக்கப்பட்டது. இந்த கிளப்பில் பெண்கள் உறுப்பினர்களாகவோ அல்லது மைதானத்தில் விளையாடவோ தடை விதிக்கபட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW