இந்த ராசி ஆண்களை பெண்களுக்கு அதிகம் பிடிக்குமாம்! நீங்க என்ன ராசி?
காதல் என்பது யாரில் வேண்டுமாலும் யாருக்கும் வரலாம், ஆனால் பெண்களுக்கு ஆண்களை பிடிக்க வேண்டும் என்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான்.
ஜோதிட சாஸ்திரத்தின் முறைப்படி பொதுவாக பெண்களுக்கு இந்த ராசி ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளனர்.
அவை எந்த எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஜாதகத்திற்கும் காதலுக்கும் கிரகங்களின் அடிப்படையில் நிறைய பொருத்தம் உள்ளது.
அதனால் தான் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு முன்பு அவர்களின் கிரக நிலையின் வாழ்க்கை கணிக்கப்படுகின்றது.
ரிஷபம்
இவர்கள் காதலில் கைதேந்தவர்கள் இதற்கான காரணம் இவர்களின் அதிபதியாக சுக்கிரன் விளங்குகிறார்.
இவர்கள் பெண்களை எப்படி கவர்கிறார்கள் என்றால் எப்போதும் இவர்கள் மற்றவர்களை கவரும் விதத்தில் ஆடை அணிவார்களாம்.
மற்றும் மிகவும் புத்திசாலித்தனமாக பேசுவார்களாம். இவர்களின் நடை உடை பாவனை இப்படி எல்லா விதத்திலும் ஒரு விதமான கவர்ச்சியின் மூலமே இவர்கள் பெண்களை கவர்கிறார்கள். மற்றும் இவர்கள் எப்பவும் காதலில் உண்மையாக இருப்பார்களாம்.
கன்னி
உங்கள் ராசியின் அதிபதி புதன் அதனால் நீங்கள் கலைநயமும், கற்பனைத்திறமும் கொண்டவர்கள். உங்களை நீங்கள் அதிகம் ரசிப்பீர்கள்.
உங்களிடம் ஆண்மை தன்மை அதிகமாக இருப்பதனால் நீங்கள் பெண்களை கவர்வீர்கள். ஆண்மையைின் உச்ச சக்தியாக விளங்பவர் புதன் அதனாலயே உங்களுக்கு இந்த சக்தி உண்டு.
சிம்மம்
சிம்ம ராசி காரர்கள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவரும் இயல்பு கொண்டவர்கள். இவர்களுக்கு காதலிப்பது என்றால் மிகவும் பிடிக்கும்.
இவர்கள் பாசத்தால் மற்றவர்களை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்கள். இவர்கள் சிறந்த புத்திசாலியான நபர். தைரியம், ஆண்மை தன்மை கொண்ட இந்த ராசிக்காரர்களை பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.
மகரம்
மகர ராசிகாரர்கள் மிகவும் அன்பானவர்கள். யாருக்கும் அஞ்சி அடங்க மாட்டார்கள். இந்த குணம் பெண்களை எளிதில் கவரும்.
பெண்களிடம் அளவுக்கு அதிகமாக அன்பு காட்டுவார்களாம். இவர்களை போல் பெண்கள் மீது அன்பு காட்ட யாருக்கும் முடியாது என்றால் அது மிகையாகாது.
இவர்களின் அன்பில் ஈர்க்கப்டடே பெண்கள் இந்த ராசிக்காரர்களை அதிகம் விரும்புகிறார்கள்.