கட்டிப்பிடித்து பாலியல் துன்புறுத்தல்.. பிக்பாஸ் 7 போட்டியாளர் மீது எழுந்த சர்ச்சை!
பிக்பாஸ் 7ல் முக்கிய போட்டியாளராக இருக்கும் மாயா கிருஷ்ணன் மீது பாலியல் சர்ச்சை எழுந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் சீசன் 7 கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பமானது.
இதில், இதில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா, மணிசந்திரா, விஷ்ணு விஜய், ஐஷு ஆகியோர் உட்பட 18 பேர் கலந்துகொண்டிருக்கின்றனர்.
வழமையாக பிக்பாஸ் வீட்டிலுள்ளவர்கள் ஒரு வீட்டில் தான் இருப்பார்கள். இந்த தடவை கொஞ்சம் வித்தியாசமாக பிக்பாஸ் வீடு இரண்டாக இருக்கின்றது.
இதற்காக ரூல்ஸ்களும், டாஸ்க்குகளும் புதிதாக கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் மாயா கடுமையான போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறார்.
பாலியல் சர்ச்சை
இவர் உயர்ந்து மற்றை போட்டியாளர்களை வீழ்த்தி விடுவார்கள் என கண்டுபிடித்த விமர்சகர்கள் மாயாவின் பழைய வழக்கை மீண்டும் கிளப்பியுள்ளார்கள்.
அத்துடன் மாயா வானவில், தொடரி, மகளிர் மட்டும், விக்ரம் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அனன்யா ஒரு பெண் மீதே பாலியல் புகார் கொடுத்தது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது இது குறித்து மாயா, "என்னைப் பற்றி அனன்யா கூறியது அத்தனையுமே பொய். இதனை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்.
என் மீது அவர் வேண்டுமென்றே அவர் அவதூறு கிளப்பியிருக்கிறார். அதனால் அவர் மீது வழக்கும் தொடுத்திருக்கிறேன்" என விளக்கமும் அளித்துவிட்டார்.
அதன் பிறகு அந்த விவகாரம் கொஞ்சம் ஆறியிருந்தது. தற்போது மாயா பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றமையினால் இந்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |