வாடகைக்கு குடியேறிய வீட்டினால் ஏற்பட்ட காதல்! லொட்டரியில் விழுந்த அதிர்ஷ்டம்: பின்பு அரங்கேறிய சோகம்
இளைஞர் ஒருவரைக் காதலித்த பெண் ஒருவர் லொட்டரி சீட்டு விழுந்த அதிர்ஷ்டத்தால் காதனக் கழட்டிவிட்ட சோகம் அரங்கேறியுள்ளது.
இளைஞர் வீட்டில் குடியேறிய பெண்
நாட்டிங்ஹாம்ஷையரில் வாழ்ந்து வரும் பொறியாளரான கிர்க் என்பவர், கடந்த 2018ம் ஆண்டு, தனது நண்பர் ஒருவர் மூலம், Laura என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.
குறித்த பெண் கிர்க் வீட்டில் மாடியில் குடியேறியுள்ள நிலையில், வாடகை எவ்வளவு தர வேண்டும் என லாரா கேட்டபோது கிர்க் எதுவும் வேண்டாம் என்று கூறியதோடு, பின்பு இவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது.
லாரா வாரம் தோறும் லொட்டரி சீட்டு வாங்கும் வழக்கத்தை கொண்டுள்ள நிலையில், அதில் கிடைக்கும் பணத்தை வைத்து ஆடம்பரமாக வாழலாம் என்று கிரக்கிடம் கூறியுள்ளார்.

லொட்டரில் விழுந்த அதிர்ஷ்டம்
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு, மார்ச் மாதத்தில் லாரா வாங்கிய சீட்டுக்கு பரிசாக முப்பது ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 10 ஆயிரம் பவுண்டு விழுந்துள்ளது.
இவை மொத்தம் 3.6 மில்லியன் பவுண்டுகள் ஆகும். முன்னதாக "Ghost Hunting" தொடர்பாக கிர்க் மற்றும் லாரா ஆகியோர் ஒரு பொழுதுபோக்காக கொண்டு வந்த நிலையில், அதனை ஒரு தொழிலாக செய்யவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் லாராவை திருமணம் கிர்க் வீட்டில் சம்மதம் தெரிவித்த நிலையில், லாராவோ சேர்ந்து வாழ முடியாது என்று கூறியதோடு, கிர்க் உடன் இருந்த வீட்டை காலி செய்துவிட்டு, 5 லட்சம் பவுண்டுக்கு புதிய ஒன்று வாங்கி தனியாகவும் குடியேறியுள்ளார்.
லொட்டரி விழுந்ததும் மாறிப்போன லாராவை நினைத்து வருந்திய கிர்க், லாராவை நம்பி தனது பொறியாளர் வேலையை விடாமல் வைத்ததால் தற்போது அந்த வேலை ஆறுதலாக அமைந்துள்ளது.
