கடைசியாக பார்க்க கெஞ்சிய காதலன்... நம்பி தனியாக சென்ற காதலிக்கு நேர்ந்த கொடூரம்
ஆந்திராவில் காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் கழுத்தை அறுத்த கொலை செய்துள்ள காதலனை கிராம மக்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பட்வேலு மண்டலம் சென்னூர்ராஜு பள்ளி கிராமத்தில் வசிப்பர் சரண். இவர் தனது ஊரின் அருகே உள்ள சிந்தலசெருவு கிராமத்தை சேர்ந்த சிரிஷா என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்திருக்கிறார்.
ஆனால் சிரிஷா தனது காதலை ஏற்க மறுத்தும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சிரிஷாவின் சொந்த ஊருக்கே சென்று, காதலை ஏற்காவிட்டாலும் பரவாயில்லை ஒருமுறை மட்டும் கடைசியாக பேச வேண்டும் என்று கூறி கெஞ்சி அழைத்துள்ளார்.
இதனை நம்பிய சிரிஷா சரணை சந்திக்க வந்த போது, சரண் திடீரென தான் மறைத்து வைத்திருந்து கத்தியை எடுத்து சிரிஷாவின் கழுத்தை அறுத்துள்ளான். பின்பு அலறி துடித்த சிரிஷா ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.
சத்தம் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள் சரணை பிடித்து அடித்ததோடு, காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கழுத்து அறுபட்டு கிடந்த சிரிஷாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.