பாம்பை ஹேர் பேண்ட்டாக போட்ட பெண்.. பதற வைத்த காட்சி
பாம்பை ஹேர் பேண்ட்டாக போட்ட பெண்ணின் காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொதுவாக பாம்புகள் என்றாலே பயம் கிளம்பும். பார்ப்பதற்கு பயங்கரமாகவும், உயிரை பறிக்கும் வகையிலும் இருக்கும் பாம்புகளை சில வழிபடுகிறார்கள், ஆனால் நேரில் பார்த்தால் ஓடி விடுவார்கள்.
வீட்டிற்கு பாம்பு இருந்தால் வனவிலங்கு பாதுகாப்புத்துறையினரை அழைத்து பிடிக்குமாறு கூறுவார்கள். என்ன தான் கடவுளாக இருந்தாலும் தன்னால் பிடிக்க கூட முடியாது.
அந்த அளவு மனிதர்களுக்கு பிதியை கிளப்பும் பாம்புகளில் ஏகப்பட்ட வகைகள் உள்ளன.
பாம்பை ஹேர் பேண்ட்டாக போடும் காட்சி

இந்த நிலையில், மாம்பழம் வெட்டிக் கொண்டிருந்த பெண்ணொருவர் அவருடைய கூந்தல் தொந்தரவாக இருப்பதால் திடீரென கீழே கூனிந்து பாம்பை கையில் எடுக்கிறார்.
அதன் பின்னர் சற்றும் யோசிக்காமல் குறித்த பெண், தன்னுடைய கூந்தலுக்கு ஹேர் பேண்ட்டாக பயன்படுத்துகிறார்.
அந்த பாம்பும் கீழும் மேலுமாக அசைந்து கொண்டிருக்கிறது, ஆனாலும் எந்தவித பயமும் இல்லாமல் அவர் மாம்பழத்தை வெட்டி சாப்பிடுகிறார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பிதியை கிளப்பியுள்ளது. எப்படி இப்படியெல்லாம் செய்ய முடிகிறது என அதிர்ச்சியான கருத்துக்களை நெட்டிசன்களை பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |