எஞ்சின் ஒயில் தான் உணவா? 33 வருட தவம்- உலகையே வியக்க வைத்த வினோதம்
எஞ்சின் ஒயில் குடித்து உயிர் வாழும் நபர் ஒருவரின் காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொதுவாக கடவுள் மீது தீராத காதல் கொண்ட சிலர், அதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள்.
அந்த வகையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சபரி மலை ஐப்பன் மீது தீராத பக்திக் கொண்ட முதியவர் ஒருவர் எஞ்சின் ஒயிலை உணவாக உட்க் கொண்டு வாழ்ந்து வருகிறார்.
இது தொடர்பில் பலரும் அறிவுரைகள் வழங்கினாலும், குறித்த நபர் எஞ்சின் ஒயில் குடிக்கும் காணொளி நம்மை வியக்க வைக்கிறது.
இந்த பழக்கம் எதற்காக?

மூன்று வேளை நன்றாக உணவு சாப்பிட்டு வாழ்பவர்களுக்கே நோய்கள் ஏராளம் வருகின்றன. ஆனால் இந்த நபர் குடிக்கும் இந்த ஒயில் உடல்நலத்திற்கு கேடு என மருத்துவர்கள் எச்சரித்தாலும், கடந்த 33 வருடங்களாக அவர் இப்படி உயிர் வாழ்வதாக கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய அவர், “இறைவனின் தனித்துவமான ஆசி காரணமாகவே இந்த வாழ்க்கை முறையில் என்னால் வாழ முடிகிறது...” என பேசியிருக்கிறார்.
மேலும் அவர் ஒரு நாளைக்கு சுமாராக 7 முதல் 8 லிட்டர் வரையிலான எஞ்சின் ஒயில் குடிப்பதாகவும் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |