பெண்கள் காலில் கருப்பு நூலை கட்டுவது ஏன்? இந்த ராசிக்காரங்க மட்டும் கட்டவே கூடாதாம்
திருஷ்டி கழியும் எனக்கூறி நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் கைகளில் அல்லது கால்களில் கருப்பு கயிறை கட்டிவிடுவார்கள்.
இது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? விதிப்படி கருப்பு நூலை கட்டினால் ராகு- கேது தோஷம் விலகுமாம், சனி பகவானின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஏனெனில் சனி கிரகத்துக்கு பிடைத்த நிறம் கருப்பு, காலில் கருப்பு நூல் கட்டியிருந்தால் சனி பகவான் மகிழ்ச்சி அடைவார்.
பாதத்தில் வசிக்கும் சனி பகவான் மகிழ்ச்சி அடைவதுடன் எதிர்மறை சக்திகள் விலகிச் செல்லும்.
இதனால் தான் சிறு குழந்தைகளின் காலிலும் கருப்பு நூலை கட்டிவிடுகின்றனர்.
குறிப்பாக சனி தசா, அரை சதி, தயாகரா தோஷங்கள் குறையும் என்பதும் நம்பிக்கை.
எனவே செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே காலில் கருப்பு நூலை கட்டிக் கொள்ளுங்கள், ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் கட்ட வேண்டும்.
இப்படி செய்தால் சனியின் பூரண அருள் கிடைத்து சங்கடங்கள் நீங்கி வாழ்வில் அமைதி நிலவும்.
குறிப்பு
மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் காலில் ஒருபோதும் கருப்பு நூல் கட்ட வேண்டாம், செவ்வாயின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை மனதில் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |