விமானத்தில் தனது உள்ளாடைகளை கழற்ற முயன்ற பெண்... விமான ஊழியர்கள் செய்த தரமான செயல்
நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் உள்ளாடைகளை கழட்ட முயன்றது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுது்தியுள்ளது. ரஷ்யாவில் 39 வயதான பெண் ஒருவர், விளாடிவோஸ்டோக் என்ற பகுதியில் இருந்து விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களுக்குள், அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்துள்ளதோடு.
தனது ஆடைகளை கழட்டவும், அதனை மீண்டும் அணிந்து கொள்ளவும் செய்து வந்துள்ளார். அதிகாரிகளின் உத்தரவினை காதில் வாங்கிக்கொள்ளாமல் தொடர்ந்து அட்டகாசம் செய்துள்ள நிலையில், குறித்த பெண்ணை கட்டி வைக்க முடிவு செய்துள்ளனர். ஊழியர்களின் சொந்த பாதுகாப்பு மற்றும் பிற பயணிகளுக்கு எந்த வித தீங்கும் ஏற்படாமல் இருக்க அந்த பெண்ணை அவரது இருக்கையில் அமரவைத்து கயிறு, சீட்பெல்ட் மற்றும் ஒட்டும் டேப் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கட்டிவைத்தனர்.
விமானத்தின் எஞ்சிய பயணம் முழுவதும் இருக்கையுடன் அந்த பெண்மணி கட்டப்பட்டிருந்ததால், பதற்றங்கள் தடுக்கப்பட்டன. இதையடுத்து குறித்த பெண் தனது இலக்கை அடைந்ததும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், விளாடிவோஸ்டோக்கில் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு செயற்கை மருந்து உட்கொண்டதாக அந்தப் பெண் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, அந்தப் பெண் எவ்வளவு போதையில் இருந்தார் என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ரஷ்யாவின் உள்துறை அமைச்சகம் பகிர்ந்துள்ளது.
விமான பயணத்தின்போது போதை மருந்தினை எடுத்துக்கொண்ட காரணத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.