பூங்காவில் திடீரென்று பிரசவ வலியால் துடிதுடித்த பெண்! கடவுளாக மாறிய ஆசிரியர்- நொடியில் குழந்தை பிறந்த அதிசயம்
பிரசவ வலியால் துடித்த பழங்குடியின பெண்மணியை கடவுள் போல வந்து பெண் ஆசிரியர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் கோணிகொப்பல் பகுதியைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் செவ்வாய்கிழமை அன்று 4 வயது மகன் மற்றும் 2 வயது மகளுடன் சிட்டி பூங்காவிற்கு சென்றுள்ளார்.
சிட்டி பூங்காவிற்கு தனது இரு குழந்தைகளுடன் இருக்கும் போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட குழந்தைகள் இருவரும் அழத்தொடங்கினர்.

குழந்தைகளின் அழுகையைக் கேட்டு பார்க்கில் இருந்தவர்கள் கூடினர். பெரும்பாலும் அங்கே ஆண்களே இருந்ததால் பிரசவ வலியால் துடித்த மல்லிகாவை கண்டது, ஆம்புலன்ஸ் மற்றும் அரசு மருத்துவமனைகளை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் யாரும் பதில் குரல் கொடுக்கவில்லை.
அந்த நேரத்தில் பள்ளிக்கு செல்வதற்காக அரசு நடுநிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரியும் ஷோபா பிரகாஷ் என்பவர் பூங்காவில் பொதுமக்கள் கூட்டத்தை நிற்பதை பார்த்து வந்துள்ளார். அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் தனக்கு தெரிந்த மும்பை மருத்துவர் ஒருவரை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டுள்ளார்.