வீட்டில் லெட்சுமியின் அருள் குறையாமல் இருக்கணுமா? பெண்கள் மறக்காமல் இதை செய்யணுமாம்
இந்துக்கள் தங்களது வீடுகளில் லட்சுமி தேவியின் அருள் நிலையாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனத்துடனே இருப்பார்கள்.
இவ்வாறு நம் வீடுகளில் மகாலட்சுமி குடியேற வேண்டும் என்றால் பெண்கள் சில காரியங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
வீட்டை கட்டி ஆழ்பவர் பெண்களாகத் தான் பெரும்பாலான பகுதியில் இருக்கின்றனர். குடும்பம் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்றால் நெற்றியில் சந்தனத்தினால் திலகம் வைத்துக்கொள்வதை பெண்கள் வாடிக்கையாக செய்து வரு வேண்டும்.
குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு தடையாக இருப்பது பெண்களின் கோபம் தான். ஆதலால் பெண்கள் தங்களது கோபத்தினை கட்டுப்படுத்த பழகிக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆண்களின் கோபம் சில நிமிடங்களில் தணிந்தாலும், பெண்களின் கோபம் மட்டும் மனதில் ஆழமாக இருக்கும். இதனால் குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலை ஏற்பட்டுவிடும்.
கோபத்தினை கட்டுப்படுத்த சிரமப்படும் பெண்கள் தியானம் செய்வது சிறந்த தீர்வாகும்.
மேலும் லட்சுமியின் அருளை பெற வேண்டும் என்றால் சந்த பொடியுடன், கஸ்தூரி மஞ்சள் தூள் 2 தேக்கரண்டி, சிறிது ஜவ்வாது மற்றும் துளசி பொடி எடுத்துக் கொண்டு நன்கு கலந்து கொள்ளவும்.
இந்த பவுடரை லட்சுமி தேவியின் பாதங்களில் வைத்து பூஜை செய்து, அதனை பன்னீர் அல்லது தண்ணீரில் கலந்து நெற்றியில் தினமும் வைத்துக்க வேண்டும். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் இதனை செய்துவந்தால் நிச்சயம் கோபத்திலிருந்து விடுபடலாம்.