பிறந்தநாள் கொண்டாட்டத்தில் திடீரென பற்றிய நெருப்பு: பதபதைக்க வைக்கும் காட்சி
மகனுடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தாய் தீவிபத்தில் சிக்கிய பதபதைக்க வைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அமெரிக்காவைச் சேர்ந்த அனா ஒஸ்டெர்ஹவுஸ்(34) என்ற பெண், தனது 7 வயது மகன் ஹண்டருடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
இந்த கொண்டாட்டத்தில் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த காட்சியில் அலங்காரம் செய்யப்பட்ட அந்த அறையில் அனைவரது முன்னிலையில் பிறந்தநாள் கேக்கில் நிறைய மெழுகுவர்த்தியை ஏற்றினார்.
அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து பாடலை பாட தொடங்கியதும் உற்சாகத்தில் அனாவும் பாடலை பாடிக்கொண்டே கேக்கில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியை அணைக்க முற்பட்டார்.
அத்தருணத்தில் எதிர்பாராத விதமாக எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியில் தலைமுடிபட்டி திடீரென தீப்பற்ற ஆரம்பித்துள்ளது. பின்பு அங்கிருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து அனாவை விபத்திலிருந்து காப்பாற்றியுள்ளனர்.
இருப்பினும் அவருக்கு கண் இமை முடியும், தலைமுடியும் பொசுங்கியது, மேலும் முகத்தில் சிறிதளவில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.